Header Ads



அவிசாவளையில் 7 பாடசாலைகளைத் தவிர, ஏனையவை நாளை திறக்கப்படும்

அவிசாவளை பகுதியில் ஏழு பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் நாளை -07- திறக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நேற்றையதினம், கொஸ்கம - சலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து, இன்று -06- அப் பகுதி பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதன்படி தொம்பே, பாதுக்க, சீதாவக ஆகிய கல்வி வலையங்களின் ஏழு பாடசாலைகள் தவிர ஏனையவற்றை நாளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அகரவிட மகா வித்தியாலயம், சலாவ க.வி, களுஅக்கல சித்தார்த்த க.வி, ஷாந்த ஜோன் போஸ்கோ க.வி, கொஸ்கம சுமேத கவி, கதுபோட க.வி, கொஸ்கம மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நாளை மூடப்படும் என, மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மத்திய அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.