Header Ads



இலங்கைக்கு 50 ஆவது இடம்

மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட  குறித்த கணக்கெடுப்பில், பொருளாதார வளர்ச்சிக்கு மனித வளத்தை அதிக அளவில் (85 சதவீதம்) பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளில் முதல் இடத்தை பின்லாந்து பிடித்துள்ளது. நோர்வே இரண்டாம் இடத்தையும், அதற்கடுத்த இடங்களை சுவிற்ஸர்லாந்து, ஜப்பான், சுவீடன், நியூஸிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.

இதன்படி தெற்காசிய நாடுகளில் இலங்கை 50 ஆவது இடத்தையும் பூட்டான் 91 ஆவது இடத்தையும், பங்களாதேஸ் 104 வது இடத்தையும், இந்தியா 105 ஆவது இடத்தையும் பாகிஸ்தான் 118 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.