Header Ads



அரநாயக்காவில் இன்று 3 சடலங்கள் மீட்பு


அரநாயக்க எலஹாப்பிட்டிய மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் மூன்று பேரின் சடலங்கள் இன்று -15- மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பிரதேச செயலாளர் இஸட். ஏ. எம். பைசால் தெரிவித்துள்ளார்.

எனினும் சடலங்கள் அடையாளம் காணமுடியாதளவுக்கு சிதைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சடலங்களுடன் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனை தவிர 22 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.