சீனி கொள்கலனில் கொக்கைன் - இன்டர்போல் விசாரணை - 3 பேர் கைது
-Vi-
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் வைத்து மீட்கப்பட்ட கொக்கைனுடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்புப்பட்டுள்ளன.
எனவே இது தொடர்பில் இன்டர்போலின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடகொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நிதி அமைச்சில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரேசிலில் இருந்து குறித்த கப்பல் கடந்த 5 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது. அதன்பின்னர் 12 ஆம் திகதி இதற்கான தகவல்கள் கிடைக்கபெற்றது. 13 ஆம் திகதி விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே 80 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டன. இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தமிழர் மற்றும் இரண்டு சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த சம்பவத்துடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்புப்பட்டுள்ளன. பிரேசிலிலுள்ள பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக போதைபொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பிலான விசாரணைகளை இன்டர்போலின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Wow , reconciliation at rocket speed ! Two Sinhalese and
ReplyDeleteone Tamil , general public has already started
co-existence !