Header Ads



முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் - 400 கோடி ஒதுக்கீடு - முதல்வர் மம்தா பேனர்ஜி

இந்துக்களின் பண்டிகையின் போது போனஸ் வழங்கும் அரசுகள் முஸ்லிம்களின் பண்டிகையின்போது போனஸ் வழங்காமல் இஸ்லாமியர்களை வஞ்சித்து வந்தன.

இஸ்லாமியர்களும் இந்நாட்டு மக்கள், இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர்ந்த மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸாக வழங்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா இதுபற்றி கூறும் போது...

முஸ்லிம்களின் பண்டிகை கால போனஸாக அரசு 400 கோடியை ஒதுக்கியுள்ளது. பெருநாளுக்கு முன்பாகவே இந்த தொகை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விடும்' என்கிறார்.

சிறுபான்மையினரையும், பெரும்பான்மையினரையும் ஒரே கண்கொண்டு பார்க்கும் அரசுதான் மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும். இவரை பின்பற்றி மற்ற மாநில முதல்வர்களும் ரமலான் போனஸ் அறிவிக்க வேண்டும்.
சுவனப்பிரியன் நஜீர் அஹமது

3 comments:

  1. அல்லாஹ் இவருக்கு நேர்வழி காட்டட்டும்.

    இவர் ஒரு முஸ்லிம் அல்லாதவர்.


    என்கள் முஸ்லிம் எம்பிக்களும் அமைச்சர்களும் இப்தார் செய்தார்கள் என்று இந்த ரமழானில் கேள்விப்படவில்லை. செய்தார்களோ தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் பேப்பர் பேப்பராக செய்திவநிதிருக்கும்.
    இவர்கள் இப்தார் செய்வார்கள். எப்போது தெரியுமா?

    தேர்தல்காலமாக இருந்தால்.

    அல்லது அவர்களின் கட்சியைக் காட்டுவதற்காக பெரும் கூட்டத்தை திரட்டிக் காட்டினால், அக்கூட்டம் முடிந்த பின், ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு பெரும் விருந்தே ஏற்பாடு பண்ணி கௌரவிப்பார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் இந்தப்பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.