Header Ads



கத்தாருக்கு ரகசிய ஆவணங்களை அனுப்பியதற்காக, முர்ஸிக்கு 2 ஆவது ஆயுள் தண்டனை


உளவு பார்த்த குற்றத்திற்காக முன்னாள் இஸ்லாமியவாத அதிபரான முகமது மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரகசிய ஆவணங்களை வளைகுடா நாடான கத்தாருக்கு அனுப்பிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மோர்ஸியும் ஒருவர். தற்போது, அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், அல் ஜசீரா தொலைக்காட்சியின் இரு செய்தியாளார்களும் அடங்குவார்கள். நீதிமன்ற விசாரணைக்கு இருவரும் வராத நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து ராணுவத்தால் அகற்றப்பட்டதிலிருந்து, மோர்ஸி தொடர் நீதிமன்ற வழக்குகளை சந்தித்தார்.

முந்தைய வழக்குகளில், ஆயுள் மற்றும் மரண தண்டனை தீர்ப்புகளை மோர்ஸி பெற்றுள்ளார்.

எகிப்திய சட்ட விதிமுறைகளை சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வரும் பின்ன்னணியில் , இத்தீர்ப்பு குறித்து மோர்ஸி மேல்முறையீடு செய்யக்கூடும்.

2 comments:

  1. Now the Egypt has jungle law. We never expect the Justice from the present animal government

    ReplyDelete
  2. புதுசு புதுசா எந்த குற்றச்சாட்டை உருவாக்கி வைத்து அவரை வெளியே விடாமல் தடுக்கலாம் என யோசித்து வழக்குப் போடுகிறார்கள். அந்தளவுக்கு பயம் பிடித்துள்ளது சர்வாதிகாரத்துக்கு

    ReplyDelete

Powered by Blogger.