மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 200 மில்லியன் சேர்ந்தது
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 200 மில்லியன் பெறுமதியான Pet scanne பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொது மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது.
இன்று 13 ஆம் திகதி 200 மில்லியன் நிதி சேர்ந்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மொஹமட் தெரிவித்தார்.
குறித்த நிதி சேகரிக்கும் முயற்சிக்கு இலங்கை முஸ்லிம்களினால் அதிகளவில் பார்வையிடப்படும் jaffna muslim இணையமும் முழு பங்களிப்பை வழங்கியிருந்தது.
புற்றுநோய் தொடர்பிலான கட்டுரைகள், Pet scanne தொடர்பிலான செய்திகள் அத்துடன் பொதுமக்கள் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி வைப்புச் செய்யும் கணக்கு இலக்கம் அடங்கிய விளம்பரத்தை jaffna muslim இலவசமாகவும் பிரசுரித்திருந்தது.
இந்த திட்டத்திற்கு உதவுமாறு உருக்கமான வேண்டுகோளையும் முன்வைத்தது
அந்தவகையில் இதற்கு உதவிய jaffna muslim வாசகர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்..
இந்த முயற்சிக்கு சிங்கள ஊடகங்களும் முக்கிய பங்காற்றியிருந்தன என்பதும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை விளம்பரப்படுத்த வேண்டாமெனச் சொல்லி 31 மில்லியன்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சிக்கு சிங்கள ஊடகங்களும் முக்கிய பங்காற்றியிருந்தன என்பதும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை விளம்பரப்படுத்த வேண்டாமெனச் சொல்லி 31 மில்லியன்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Masah Allah. Excellent example effort in this country
ReplyDeleteமாஷா அல்லாஹ் உங்களின் முயற்சியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.மேலும் இந்த விடயத்தில் ஜப்னா முஸ்லிம் பெரும்பங்காற்றி இருக்கிறதுமுயற்சி எடுத்அனைவருக்கும் .உதவி வழங்கிஅனைவருக்கும் அல்லாஹ இந்த றமழான் மாதத்தில் அனைத்து பாவங்களையும் மன்னித்து றய்யான் என்னும் சொர்க்கத்துக்கு வாரிசுகளாக்குவானாக மேலும் இவ்வாறான கொடிய நோயில் இருந்தும் நம்மனைவரையும் பாதுகாப்பானாக
ReplyDelete