அமைச்சர்களுக்குப் புதிதாக வாகனக் கொள்வனவுக்கு 117 கோடி ரூபா நிதி
அமைச்சர்களுக்குப் புதிதாக வாகனக் கொள்வனவு: 117 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு கோரி மதிப்பீடு சமர்ப்பிப்பு
அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்குப் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 117 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி முழுமையான மதிப்பீடொன்று பாராளுமன்றத்தில் இன்று -07- சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சருக்குப் பதிலாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
22 அமைச்சுகளின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 32 பேருக்கு இதன் மூலம் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதற்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது.

மக்களின் பணத்தில் எப்படியோ சொகுசாக வாழ்கிறார்கள்.
ReplyDeleteஒரு பக்கம் வெள்ளப்பேரழிவு, இன்னொரு பக்கம் ஆயுதக்களஞ்சிய அழிவு, இவைகளைப் பற்றி வாயினால் ஏதோதோ பேசிவிட்டு அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கே முன்னுரிமை.
அங்கே உண்மைக்குண்மையான ஒரு எம்பி இருந்திருந்தால் இதனை எதிர்த்துப் பெசியிருப்பார். அப்படி எவரும் இல்லை போலவே தெரிகிறது. இலங்கை மக்களுக்கு இறைவனே துணை.
Yes
Deleteஇதுவரை அமைச்சுகளிலும் அமைச்சர்கள் பாவித்த வாகனங்கள் எங்கே நாடு பாதாளகுழியில் விழுந்து கிடைக்கிறது இவர்களுக்கு புதியதாக வாகனம் கேட்குது
ReplyDeleteநாட்டு மக்களின் வாழ்க்கைச்செலவை இன்னும் அதிகரிக்கச்செய்கின்ற ஓர் நடவடிக்கையாகும்.
ReplyDeleteபொருட்கள் மீது விதிக்கப்படுகின்ற வரிகள் மூலம் நாட்டு மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற பணமானது இவ்வாறுதான் செலவிடப்படுகிறது.
ஏன் ? இதர்க்கு முன்பிருந்த அமைச்சர்கள் பாவித்த வாகனங்களுக்கு என்னவாயிற்று.
சாதாரன மக்கள் கொள்வனவு செய்யும் வாகனங்களுக்கு விதிக்கப்படுகின்ற 200% அல்லது 300% வரிகள் மூலம் பெறப்படும் பணம் நாட்டில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதனை மக்கள் உணர வேண்டும்