Header Ads



"அரசியலுக்கு வரும்போது 1 சைக்கிள், தற்போது 2 நீச்சல் தடாகங்கள் இருக்கும் வீடு"

நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவாகி வரும் போது வறியவர்களாக வாழ்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுகிய காலத்தில் கோடிஸ்வரர்களாக மாறியுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் எப்படி பணத்தை சம்பாதித்தனர் என்ற தகவல்களை தேடுவதற்கு பல்வேறு தடைகள் இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இப்படியானவர்கள் அரச பணத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்தினர் என்பதை மக்களால் அறிந்து கொள்ள முடியும் என்னும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வந்தர்களின் உண்மை நிலைமையை இதன் மூலம் வெளிக்கொண்டு வர முடியும்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை பயன்படுத்திய விதத்தை நினைத்தும் பார்க்க முடியாது.

சில அமைச்சர்கள் தமது இடுப்பை உடைத்து கொண்டு சந்தர்ப்பத்திலும் முட்டியை உடைத்து கொண்ட சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு கோடி ரூபா முதல் எட்டு கோடி ரூபா முதல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படியான சம்பவங்கள் குறித்து தகவல்களை கண்டறிய முறைகள் இருக்கவில்லை.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் அரசியலுக்கு வரும் போது அவரிடம் சைக்கிள் ஒன்று மட்டுமே இருந்தது. தற்போது இரண்டு நீச்சல் தடாகங்கள் இருக்கும் வீடு உள்ளது எனவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமாநயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.