Header Ads



"ஹஜ்ஜதுல் விதாவினை வைத்துதான் ஐ.நா.வின் மனித உரிமை பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது"

(சுலைமான் றாபி) 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனமானது  ஹஜ்ஜதுல் விதாவினை வைத்துதான் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது என கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றாசிக் இன்றைய தினம் (29) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற நிந்தவூர் நலன்புரிச் சபையின் திட்ட வரைபுகள் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் : 

தற்காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜதுல் விதாவின் உரை பற்றியும், ஹுதைபிய்யா உடன் படிக்கை பற்றியும் உலகமே வியந்து பேசுகின்றது. உலகத்திற்கு அடிப்படை உரிமையையும், உண்மையான விழுமியங்களையும் சொன்னது இஸ்லாம். மற்ற மனிதனையும் நேசி என்று சொன்னது இஸ்லாம். இதனை ஒத்த பெருரையொன்ரைத்தான் நபிகளார் அவர்கள் இறுதிப் பேருரையில்  மிகத்தெளிவாகவும், அற்புதமாகவும் மிகவும் நிதானத்துடனும்  சொன்னார்கள். 

இன்று ஹஜ்ஜதுல் விதாவினை வைத்துதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. அதேபோன்று போர்ச்சூழலிலும் போர் வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற உசாத்துணையாக ஹஜ்ஜதுல் விதாவினைக் கூட பின்பற்றுகிறார்கள். 

அன்று முஸ்லீம்களுக்கு பாதகமாக காணப்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையானது அதில் நபிகளாரின் பெயரிற்குப் பின் "நபி" எனும் வசனத்தைக் கூட எழுத முடியாத உடன்படிக்கையை இன்று நோர்வே,  ஒக்ஸ்போர்ட் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இவ்வுடன்படிக்கைக்குரிய பின் புலமும், அதன் இரகசியமும், மந்திரமும் என்ன? என்பதனைத்தேடிப் பார்த்து ஆராய்கின்றார்கள். 

இன்று இலங்கையில் முஸ்லிம் வாரிசுரிமைகள் சட்டத்தைப் பற்றிய ஏடுகள் இல்லை. வாரிசுரிமைச் சட்டம் குர்ஆனிலே பேசப் பட்டிருக்கிறது. அந்தக் குர்ஆனியச் சட்டங்களை முழுமைப்படுத்தி எமது மக்கள்  விளங்குவதற்கு ஏற்ற வகையிலே வாசிக்கத்தக் தக்க நூல்கள் இல்லை. இன்று முஸ்லிம் நாடுகளிலும் இலங்கையில் உள்ள உயர் நீதிமன்றுகளிலும் பின் பற்றப்படுகின்ற சட்டமாக இஸ்லாமிய சட்டவியலை எச்.வி. வீரமந்திரி அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். 

நமது ஆழுமைகள் வீணடிக்கப் படக்கூடாது. அப்போதுதான் சமூகத்தில் நமது ஆழுமைகள் மூலம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று ஆழுமைகளுக்கிடையிலான பிணக்குகளே அதிகம். ஆழுமைகளை ஒற்றுமைப்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் நமது ஆழுமைகளை நாம் அதிகமாக விருத்தி செய்து கொள்ள முடியும்.  குறுகிய நோக்கமும், சுய நலமும் சந்தோசத்தினை இல்லாமல் செய்கின்றது. எமது சிந்தனைத்திறன் சமுதாய வினைத்திரனுக்காக பயன்படுத்தப்படாமல் போகுமானால் அவை ஒரு வெற்றும் வெதுகுமான சிந்தனையாக இருக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

நிந்தவூர் நலன்புரிச் சபை (NWC) யின் திட்ட வரைபுகள் வெற்றிகரமாக நிறைவு !

நிந்தவூரின் எதிர்கால அபிவிருத்திற்கும் முறையான திட்டமிடலுடன் கூடிய  பல்வேறு துறைகளின் முன்னேற்றங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் நலன்புரிச் சபை (NWC) யின்  நடப்பாண்டிற்கான செயற்திட்டங்களும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் சம்பந்தமானதுமான விஷேட கலந்துரையாடல் இன்றைய தினம் (29) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அதன் தலைவரும் முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான அல்-ஹாஜ் யாக்குப் ஹசன் தலைமையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்விற்கு கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றசாக், மெளலவி அலி அஹமட் (றஷாதி), பொறியியலாளரும், சபையின் உப தலைவருமான ரி. இஸ்மாயில் உள்ளிட்ட நலன்புரிச் சபையின் 11 பிரிவுகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் உள்ளிட்டோர்கள் பங்குபற்றியதோடு குறித்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேசத்தின் எதிர்கால நிலைமை தொடர்பான திட்ட வரைபுகளும்  தயாரிக்கப்பட்டன. 

இதேவேளை இந்நிகழ்வில் கல்வி, நிதி முகாமைத்துவம், சுகாதாரம், சமூகசேவை, சட்டம் மற்றும் பாதுகாப்பு, வாழ்வாதாரமும் வர்த்தக அபிவிருத்தியும், உட்கடமைப்பு அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவம், விளையாட்டு மற்றும் சமய அலுவல்கள் சம்பந்தமானதுமான சிறப்பான திட்ட வரைபுகள் முன்வைக்கப் பட்டதோடு, அவைகள் எதிர்வரும் காலங்களில் நிந்தவூரில் அமுல் படுத்தப்படவேண்டிய தேவையின் வெளிப்பாடுகளும் அந்தந்த பிரிவுகளின் பொறுப்பாளர்களால் விரிவுரையாற்றப்பட்டன

எதிர்கால நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஒரு ஸ்திரமான தன்மையை மேற்கண்ட பிரிவுகளில் நடைமுறைப்படுத்த இருப்பதுடன் குறிப்பாக நிந்தவூரில் வட்டி இல்லாத கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதே போல் குறித்த செயற்பாட்டிற்கு வட்டி இல்லா வங்கி முறை சம்பந்தமாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, நிந்தவூரின் எதிர்கால அபிவிருத்திற்கும் முறையான திட்டமிடலுடன் கூடிய  பல்வேறு துறைகளின் முன்னேற்றங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் நலன்புரிச் சபையின் திட்ட வரைபானது மிகவும் வெற்றியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

4 comments:

  1. This is what ACJU trying do all nesssery needs with divesity

    ReplyDelete
  2. First of all, his job itself leading him to shirk (legislation for non but Allah) - When people with no Islamic knowledge lead community - then this is what you would expect.

    ReplyDelete
  3. Abu Saadia அவர்களே எதை ஷிர்க் என்கிறீர்கள் முதலில் நீதிபதியாக இருப்பது என்பது ஒரு வரப்பிரசாதம் என்பதாகும் அதைவிட்டு விட்டு ஷிர்க் என்கிறீர்கள் நீங்கள் ஷிர்க் பற்றிய தெளிவைப் பெறுங்கள் அதன் பிறகு பேச வாருங்கள்

    ReplyDelete
  4. இந்த abusadia என்ன சொல்ல வருகிறார்

    ReplyDelete

Powered by Blogger.