Header Ads



இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஹக்கீம் முக்கிய பங்காற்றியுள்ளார்

மகியங்கனை பிரதேசத்தில் நடந்த சம்பவமொன்றை தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றியுள்ளார். 

பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த மௌலவி ஷேகுதீன் உடனடியாக இந்த விடயத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து,  அவர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் தொடர்புகொண்டு அப்பிரதேசத்தில் குறிப்பாக பங்கரகம்மன, ரோஹன, தம்பகொல்ல கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாறும் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக கூறியிருந்தார். அத்துடன் பதுளை பிரதி பொலிஸ் மா அதிபர், பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடனும் அமைச்சர் ஹக்கீம் தொடர்பில் இருந்தார். 

அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட உரிய நடவடிக்கைகள், நிலைமை சுமுகமாவதற்கு பெரிதும் உதவியுள்ளதாக சவூதிஅரேபியாவின் ரியாத் நகரரிலிருந்து பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஆ .....ஆ .....அப்படியா.....அப்ப நாங்க நம்புறோம்................

    ReplyDelete
  2. ANY WAY HAKEEM OR RISHATH FAIZER MUSTAFA ALL OF THEM DID GOOD JOB.DO WHAT EVER SHAKE OF ALLAH

    ReplyDelete
  3. ஹகீம் பிரச்சினையை தீர்த்துவைக்கலாம். சிங்களவண்ட உள்ளத்தில எங்கட மூதேவிகள் விதைத்த குரோதத்தை யார் தீர்த்துவைப்பது ? நாம் நிதானமாக ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைக்க வேண்டும் சிங்களவனை விட தமிழ் கடும்போக்கு பொறாமை வாதிகளே எமக்கும் சிங்களவனுக்கும் இடையில் ஒரு கலவரத்தை எதிர்பார்த்துகொண்டு நாக்கை தொங்கபோட்டுகொண்டு அழையுரானுங்க

    ReplyDelete

Powered by Blogger.