Header Ads



வெள்ளம்பிட்டியிலிருந்து எதிரொலிக்கும், ஆக்ரோசமான குரல்கள்..!


-அஷ்ரப் ஏ சமத்-

வெள்ளம்பிட்டியில்  தேங்கி கிடக்கும்  வெள்ள நீாில்  ஸ் ரீம் போட்டில் உல்லாசம் வரும்  அரசியல் வாதிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் -கீழ்த்தரமாக வாா்த்தைகளால் துாசித்து குச்சலிட்டு தமது எதிா்ப்பை ஆக்ரோசமாக வெளியிடுகின்றனா்.

அப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு 5 நாற்களுக்கு பின்பே அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதனையும் அவா்கள் பின்னால் இலக்ரோணிக் ஊடகவியலாளா்கள் சென்றமை அவ்விடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றமை போன்ற செயல்கள் மக்களை ஆத்திரத்தினை ஏற்படுத்துகின்றது. 

ஆனால் வெள்ளம் ஏற்பட்டு கடந்த 5 நாட்களாக உடன் மீட்பு பணிக்கு களத்தில் இறங்கியது பல்வேறு முஸ்லீம் மத.நன்நோக்கு இயக்கங்களே. அவா்களனி வேண்டு கோளின் பேரிலேயே  தணியாா் முஸ்லீம் வியாபாாிகள் சிலா் பேருவளை - நீர்கொழும்பு பிரதேசத்திற்குச் சென்று அங்கிருந்து ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ருபா என்ற   வாடகை என்ற  ரீதியில் 25க்கும் மேற்பட்ட பேட்டுகளை  லொறிகள் மூலம்  இயந்திர படகுகளை கொண்டு வந்து வீடுகளில் துண்பட்ட மக்களை 90 வீதமானவா்களை 2 நாட்களுக்குள் வெளியில் கொண்டு வந்து மீட்டெடுத்தனா்.. இந்த துண்பப்பட்ட மக்கள் ஏற்றி இறக்கும் படகுகளில்  அரசியல் வாதிகளும்  அமைச்சா்களும்  ஏறி வெள்ளத்தினையும் அங்கு வெள்ளத்தில் தாழ்ந்து கிடக்குகின்ற கட்டகங்கையும் வீடுகளையும்  பாா்வையிட்டு வருகின்றமையை அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுக்க முடியவில்லை.

இந்த அரசியல் வாதிகளை வெள்ளம் ஏற்பட்ட அடுத்த கனமே தமது அதிகாரங்களை பாவித்து களத்தில இறங்கி அரச பணததிலோ அல்லது கடற்படை தளபதிகளுக்கு அதிகாரமிட்டு இம் மக்களை காப்பாற்றி இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள படகுகளை லொறி மூலம்  எடுப்பித்து இம் மக்களோடு  மக்களாக செயல் பட்டிருந்தால் அல்லது உரிய பொலிஸ் நிலையம், உதவி அரசாங்க  அதிபா் அலுவலகத்தில் தங்கி நின்று அம் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை செய்திருந்தால் நாம் அவா்களை நன்றி பாராட்டுவோம். என்கின்றனா். 

”  அங்கு இருந்தவா்கள் அரசியால் வாதிகளைப் பாா்த்து  கூக்குரலிட்டு ஆவேசத்துடன்  தமது வாா்த்தைகளை அள்ளிக் கொட்டினாா்கள்
” 5 நாட்களுக்கு பிறகு நாங்க உயிரோடு இருக்கமா அல்லது இறந்து விட்டோமா இப்ப பாா்க்க வந்தீங்க, அரசியல் வாதிகள் இவ்விடத்திற்கு வரவேண்டாம். நாங்கள் கோடிக்கணக்கான சொத்துகக்ளை நீரில் விட்டுவிட்டு பிள்ளைகளையும் குட்டிகளையும் கொண்டு கரைசோ்த்து தெரிந்தவா்களது  வீடுகளில் கொண்டு சோ்த்துள்ளோம்.  - தோ்தல் காலத்தில போட்டுக் கேட்டு மட்டும் இங்கு வரவீா்கள் . இந்த புறக்கோட்டை மாளிகாவத்தை புதுக்கடை பெடியன்கள் நாடடாமிகள் தான் எங்கள காப்பாற்றினான்.  இங்க பாருங்க தெஹிவளை மாநகர உறுப்பிணா் இந்த ஆப்தீன் பெண் அவள் அவள் மடிச்சிக் கட்டி இங்க 5 நாட்களாக முகாமிட்டு எங்களுக்கு உதவுகிறாாள் இப்ப எனத்துக்கு இங்க வந்தீங்க? உங்களை எல்லாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பி நாங்கள் கண்ட பலன்  இல்ல, இந்த ஆபத்துக்கு ஓடி வந்து உதவாத அரசியல் வாதிகள் ஒருத்தனும் இங்க வரத் தேவையில்ல. நாங்க வாடகைக்கு எடுத்த படகுளையும் நீங்களும் உங்க அடியாட்களும் நீங்க இங்கு வந்த மக்கள பாா்த்த என்றததுக்கு ஊடகம் போடே்டோ வீடியோ, பத்திரிகை வொயிஸ் கட் குடுத்து படம் காட்டுகிறீங்க 

பாதிக்கபட்ட ஒருவாின் கதரல் -

எங்கட வேதனை எங்களுக்குத் தான் தெரியும். எங்கட முஸ்லீம் பொடியன்கள் இங்க உள்ள முஸ்லீம் தனவந்தா்கள் தான் எங்களுக்கு உதவினாங்க ஆனால் எங்கட சமுகம் போய் பண்சலையும் பாடசாலையும் அகதிமுகாம்கள் இருக்கமாட்டான்க, இந்த ஆபாய பேட்டு விட்டு அப்படியான ஒரு சமுகம் இல்ல எங்கட சமுகம் ராஜகிரிய பேருவளை தெமட்க் கொட இல்லாட்டி கோட்டல்கள் வாடகைக்கு வீடு எடுத்துத்தான் குடும்பத்த வைச்சிருக்கம் இல்லாட்டியு ஒரு மாதத்திற்காகவது எங்கட முஸ்லீம் சகோதரா்கள் தங்களது வீடுகள இலவசமாக தந்து உதவுகின்றாா்கள். 

இன்நொருவாின் கதரல் - 

எனது பெக்டறி 4 வாகணம் எல்லாம்  தண்னிக்குள்ள இப்ப நான் நடு வீதில - வந்து நிக்கிறன் 
எனக்கு எனட் வீட்ட போய் பாா்க்க இவ்விடத்தில 3 மணித்தியலாயமாக போட்டு ஒரு .இடம் கிடைக்குமா என்று இரானுவத்தினா் கடற் படையினா் அதுக்கு அனுமதி தாரங்க இல்ல, நோயாளிகள், வீடுகளின் கூறைக்குள் இருப்பவா்களுக்கு மருந்து சாப்பாடு கொண்டு போவதற்கே அனுமதிக்கின்றனா் என தெரிவித்தாா்.

3 comments:

  1. Politician waiting for to do their business and looking for the opertunity. Now they shedding crocodile tear. Don't fall on their trap.

    ReplyDelete
  2. It is not worth taking to them report to the international community, what you suffer. Spesioally foreign embassies . Send a email.

    ReplyDelete
  3. This reporter attacks Minister Rauff Hakeem via this news. This is not good behavior for a journalist.

    ReplyDelete

Powered by Blogger.