வசீம் தாஜூடீனின் படுகொலையில், நாற்றமடிக்கும் நல்லாட்சி
தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் பாதுகாத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரை இந்த அரசியல்வாதி பாதுகாத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உயர் காவல்துறை அதிகாரி கைது செய்யப்படுவதனை தற்காலிக அடிப்படையில் அரசியல்வாதி தடுத்து நிறுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கோரி இவ்வாறு கைது செய்வதனை தவிர்த்துக்கொண்டுள்ளார்.
முன்னாள் காவல்துறை அதிகாரிக்கும் அரசாங்க அமைச்சர் ஒருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றையும் இந்த அரசியல்வாதி ஏற்பாடு செய்த போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டால் பாரியளவிலான சம்பவங்கள் பல தொடர்பான உண்மைகள் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிடுவதுதான் ஊடக தர்மம்.
ReplyDelete