Header Ads



'தப்லீக் ஜமாஅத்' பற்றிய ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்


-விடிவெள்ளி ARA.Fareel-

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. 

‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். 

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உலமா சபை ‘தப்லீக் நிகாயா’ என்றோர் பிரிவை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் இப்­பி­ரிவு நகரப் பகு­தியில் காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இப்­பி­ரிவு அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களைக் கொண்­டுள்­ளது என்ற கருத்­துப்­ப­டவும் பேசி­யி­ருந்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் கருத்து வின­வு­கை­யி­லேயே அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

அரபு நாடு­க­ளி­லி­ருந்து இந் நாட்­டுக்கு கிடைக்கும் நிதி­யு­த­வி­யினால் வைத்­தி­ய­சா­லை­களும் பாலங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. மற்றும் பல அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு செல­வி­டப்­பட்­டுள்­ளன. ‘தப்லீக் பிரிவு’ வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தில்லை.

மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக  இப் புனிதப் பணியில் ஈடு­ப­டு­ப­வர்கள் தமது சொந்தப் பணத்­தையே செலவு செய்­கி­றார்கள்.

சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஈரான் போன்ற நாடுகள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிதி­யு­த­வி­களை வழங்­கு­வ­தில்லை. நாட்டின் அபி­வி­ருத்­திக்­கென்றே வழங்கி வரு­கின்­றன. பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் இவ்­வா­றான கருத்­துக்கள் மீண்டும் இனங்­களின் உற­வு­க­ளுக்­கி­டையில் விரி­சலை உரு­வாக்கும் வகையில் அமைந்­துள்­ளன.

உலமா சபை ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கிறது. சமயக் கோட்பாடுகளை முன்னிறுத்தி மக்களை நல்வழிப்படுத்தும் செயற்றிட்டங்களை ஒரு போதும் அடிப்படைவாதம் என முத்திரை குத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

8 comments:

  1. ACJU should hold a press conference and deny these allegations from this racist monk. He is a curse for the Buddhist and all.

    ReplyDelete
  2. உலமா சபை இப்போதாவது வாய் திறந்ததை நினைத்து மாகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  3. இவர்கல் எதக்காஹ வாய் திரண்டர்ஹல் சற்று ஆரய்ம்

    ReplyDelete
  4. என்னது !!!??? கண்டனம் வெளியிட்டு உள்ளார்களா ??? அப்போ நாட்டுல தொடந்து மழையா !!!! நம்ப முடியல்ல........

    ReplyDelete
  5. ghouse: why only this time need to give a press conf. for what he said somthing to that particular jamath !!!

    ReplyDelete
  6. Farzaan dont insult ulamas.allah newer give you aalim in your seven generation

    ReplyDelete
  7. Farzaan dont insult ulamas.allah newer give you aalim in your seven generation

    ReplyDelete

Powered by Blogger.