Header Ads



நீங்கள் கொடுக்கும், தண்டனையை ஏற்கிறேன் - கனடிய பிரதமர் (வீடியோ)

கனடிய பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடந்து கொண்ட விதம் எதிர்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர்.

ஆட்சியில் அமர்ந்த பின்னர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிக ஈடுபாட்டுடனான செயல்பாடு, அகதிகளை சந்தித்தல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், சமூக வலைதள பயன்பாடு என பலவற்றில் முனைப்புடன் இருந்த இவருக்கு சமீபத்தில் நடந்த ஒருசெயல் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ஒரு முறை, இருமுறை அல்ல மூன்று முறை மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஆளாகியுள்ளார்.


கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது இருக்கையில் அமர வைப்பதற்காக அவரை பிடித்து அழைத்து செல்கையில், வாக்களிக்க வந்த புது ஜனநாயககட்சியின் எம்.பி. Ruth Ellen Brosseau யின் மார்பின் மீது ட்ரூடோவின் முழங்கை பட்டுள்ளது.

இதனால், இவர்கள் இருவருக்கும்இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் இச்செயலுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என அந்த கட்சியின் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரும் தான்இந்த செயலை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் அவ்வாறு இதில் தவறு இருந்திருந்தால் மன்னிப்புகேட்டுககொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

ட்ரூடா மன்னிப்பு கோரியும், இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை, இடது சாரி கட்சிகள்அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

லிபரல் கட்சி எம்பி GeoffRegan கூறியதாவது, நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு நடந்துகொண்டது பொருத்தமானது அல்ல என கூறியுள்ளார்.

இடைக்கால கன்சர்வேடிவ் தலைவர்Rona அம்ப்ரோஸ் கூறியதாவது, ஒரு தலைவரின் தகுதிக்கு ஏற்றதாக இல்லை என கூறியுள்ளார்.

ட்ரூடோ இதுபோன்று நடந்துகொள்ளது இது ஒன்றும் முதல் முறை கிடையாது, கடந்த 2011 ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் எம்பி PeterKent- யிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் மீது எழுந்துவரும் விமர்சனங்களுக்கு ட்ரூடோ மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் கூறியதாவது, நானும் மனிதன்தான், உயர் வேலை அழுத்தம் போன்றவற்றை சமாளித்து வரும் நான், இதுபோன்ற தவறை செய்துவிட்டேன், இந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.

அப்படி இந்த தவறினை மன்னிக்க முடியாவிட்டால், நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.