இலங்கையரும் அவரது மகனும், பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்
-GTN-
இலங்கையர் ஒருவரும் அவருது மகனும் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
ஈரானில் வசித்து வந்த இருவரையும் அந்நாட்டு அதிகாரிகள் பாகிஸ்தானியர்கள் என தவறுதலாகக் கருதி அவர்களை, பஸ் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்துல் மஜீட் சஹீட் மற்றும் அவரது மகனே இவ்வாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரையில் குறித்த இருவரும் பாகிஸ்தான் முகாம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விடயம் குறித்த மனு நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட போது 15 நாட்களுக்குள் இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி விரைவில் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
2013ம் ஆண்டு ஈரானுக்கு சென்றதாக மஜீட் தெரிவித்துள்ளார்.
வீசா காலம் முடிவடைந்து 2 மாதங்களின் பின்னர் தாமும் மகனும் எல்லைப் பகுதிக்கு சென்றிருந்த போது அதிகாரிகள் தம்மை விசாரணை செய்த போது வீசா காலம் முடிவடைந்த கடவுச்சீட்டை தாம் காண்பிக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் தம்மை பாகிஸ்தானியர் என கருதி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டதாக மஜீட் தெரிவித்துள்ளார்.

They are my family members
ReplyDeleteHe is my cousin ok i want to release them
I want to release them ok
ReplyDelete