Header Ads



கூட்டு எதிர்க்கட்சியினரிடம் ஒரு, சோற்றுப் பார்சலை கையளிக்கவும் மக்கள் அச்சம் - நாமல்

இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கையளிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு நாமல் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாமல், 

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஒரு சோற்றுப் பார்சலை கையளிக்கவும் பொதுமக்கள் தயக்கமும், அச்சமும் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்தால் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினரிடம் எந்தவொரு நிவாரணப் பொருட்களை வழங்கவும் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனினும் நாங்கள் எங்களால் முடிந்த வரையில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்போம் என்றும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. You have stock andbank balance by trillion

    ReplyDelete
  2. இல்லை இல்லை அதையும் சுட்டுக்குப்போய்விடுவீங்க என்ற அச்சம்.

    ReplyDelete
  3. 10 வருட ஆட்சியில் நீங்கள் கூட்டி கழித்து சேர்த்து வைத்தவைகளே இன்று உங்களுக்கு எதிராக மாறி இருக்கின்றது ... உங்களின் இந்த திருட்டு அரசியலே இன்று உங்களை நோக்கி ஒரு சோற்று பார்சலை கையளிக்க கூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் அதாவது இது உறியவர்களை சென்றடையுமா என்ற தயக்கத்துடன்

    ReplyDelete
  4. உங்களின் நில் வBலகாய எங்க ராசா?
    அது எல்லாம் இருக்கட்டும் நீ இது வரைக்கும் என்னத கிழிச்சாய்

    ReplyDelete
  5. Oya meachara dawasa khoida iddiya ? Appea janattawata mea dawal sittawela dan sattiyai anduwaik tamai kama janattawata danne

    ReplyDelete
  6. Oya meachara dawasa khoida iddiya ? Appea janattawata mea dawal sittawela dan sattiyai anduwaik tamai kama janattawata danne

    ReplyDelete
  7. நாமலின் கூற்று சரியானது; ஆனால் நியாயம் அபத்தமானது!

    ReplyDelete
  8. This not a time to propagate anyones politics.

    ReplyDelete
  9. உங்களின் நீலப்படையனி எங்கே?

    ReplyDelete

Powered by Blogger.