Header Ads



மைத்திரியின் தயவினால் தப்பிக்கும், ஊழல் அதிகாரிகள்

-Tw-

பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றும் 139 அதிகாரிகள் ராஜினாமா செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் மஹிந்த ஆட்சியின் போது உயர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்களாகும்.

சமகால அரசாங்கத்தினால் மேற்கொளளப்படுகின்ற நிதி மோசடி மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, தமது பதவிகளை இராஜினாமா செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எதிர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்படவிருந்த ஆணையத்தின் முன்னாள் தலைவர், பணிப்பாளர் சபை, மேலதிக செயலாளர் உட்பட 6 பேரின் கைதை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கி செல்வதற்கு முன்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படவிருந்த அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு முதல் நாள் இரவு விசாரணை பிரிவு அதிகாரிகள், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளனர். இதனை கைது செய்யப்படவிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படவிருந்த அதிகாரிகளுக்குள் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஹேமா தர்மவர்தனவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். அவர் பசில் ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகும்.

இதற்கு மேலதிகமாக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பாஷ்வர சேனாங்க குணரத்ன, பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயரத்ன மற்றும் ரணசிங்க சேமசிங்க, தொன் சந்திரசிறி மற்றும் அமித கித்சிறி ரணவக்க ஆகிய அதிகாரிகளாகும்.

இந்த மோசடியான அதிகாரிகளை கைது செய்வதற்கு எதிராக கூட்டு செயற்பாடொன்றை நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் பல்வேறு ஊழல் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அதிகமானோர் உறுதியாக அந்த குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாகுவதற்கு போதுமான சாட்சிகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விசாரணைகளுக்கு முன்னர் மோசடி அதிகாரிகள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகளை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு அறிவித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இந்த உத்தரவினால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அரசியல் தலையீடு காரணமாக ஊழல் மோசடி தொடர்பிலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் அல்லது வேறு தொடர்புகளுக்கமைய தெரிவு செய்யப்பட்ட நபர்களை மாத்திரம் கைது செய்யுமாறு பொலிஸார் மீது சுமத்தப்படுகின்றமை இதன்மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லாட்சியை உருவாக்குவதாக உறுதியளித்து அதிகாரத்தை பெற்றுகொண்ட ஜனாதிபதி, தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வந்த மக்களின் நம்பிக்கையை உடைத்து மோசடிகாரர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து மோசடிகாரர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டால், தங்கள் உயிரை குறித்தேனும் சிந்திக்காமல் இந்த விசாரணைகளுக்கு தலையிட்ட பொலிஸ் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைகள அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.