Header Ads



பாராளுமன்றத்தில் "கெட்ட வார்த்தை" விவகாரம்


நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாடாளுமன்ற விவாதத்தின் போது கெட்டவார்த்தையால் திட்டியமைக்காக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இந்தக் கோரிக்கையை நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் விடுத்தார்.

அமைச்சர், கெட்டவார்த்தையை பயன்படுத்திமை தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குணவர்த்தன கோரினார்.

அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம், அந்த நாட்டின் பிரதமர் கெட்டவார்த்தையால் திட்டியமைக்காக அவரை நாடாளுமன்ற அமர்வுகளில் இடைநிறுத்தியமையை இடைநிறுத்திதை தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.

இந்தக்கோரிக்கைக்கு பதில் வழங்கிய சபாநாயகர், தாம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.

1 comment:

  1. Hon.Speaker? Why can not take action against Dinesh & Wimal? They was sused very bad words against you in the last fighting event.

    ReplyDelete

Powered by Blogger.