Header Ads



அரசாங்கத்திற்கு மட்டும், நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முடியாது - அஷ்ஷெய்க் இம்ரான்


ஒரு அனர்த்தம் ஏற்பட்டு விட்டது என்றால் அது வெள்ளம் பெருக்காக இருக்கலாம் அல்லது பூமி ஆதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது ஏற்கெனவே நடந்த சுனாமி போன்றவையாகக் கூட இருக்கலாம். உடனடியாக களத்திலே போய் அந்த மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து விட்டோம். அவர்களுடைய பிரச்சினை முடித்து விட்டோம் என்று நாம் ஒரு போதும் நினைக்கக் கூடாது. திடீர் அனர்த்தங்கள் பிரச்சினைகள் வரும் போது ஆதனால் ஏற்படக் கூடிய விபரீதங்கள.; அந்த மக்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற கஷ்ட நஷ்டங்கள.; அவர்கள் மீளவும் இருந்த இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு வருவதற்கான காலம் குறைந்தளவு ஆறு மாதங்களையும் தாண்டலாம் அல்லது ஒரு வருடத்தையும் அல்லது அதற்குப் பாலும் செல்லலாம். அதற்கேற்ப திட்டமிட்டு அடிப்படையில் எமது நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று  சர்தேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும் குருநாகல் நகர் சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க்  ஜே.  எம். இம்ரான் தெரிவித்தார்.

றமழானை வரவேற்பதில் உலமாக்களின் பங்களிப்பு  என்ற தலைப்பில் குருநாகல் விருந்துபசார மண்டத்தில் 21-05-20156 அஷ்;ஷெய்க் அஷ்ஷெய்க் ஜே.  எம். இம்ரான் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய அஷ்;ஷெய்க் அஷ்ஷெய்க்  ஜே.  எம். இம்ரான் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜம்மிய்யதுல் உலமா, அனைத்து நிறுவனங்களும், தனவந்தர்களும், பள்ளிவாசல்களும்  தற்போது களத்தில் இறங்கி மனிதாபினமானப் பணிகைளை செய்து கொண்டிந்தாலும் அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியாதளவுக்கு நிலவரம் மிகவும் மோசமாக இருக்கிறது. 

அதேவேளை அரசாங்கத்திற்கு மட்டும் இந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்க  முடியாது. அரசாங்கம் ஒரு புறத்தில் தவிக்கிறது. ஜம்மிய்யல்துல் உலமா இன்னுமொபுறம் தவிக்கிறது.   பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பிரச்சினைத் தீர்க்க நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு திட்ட மிட்ட அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 

இங்கு உயிர் உடமைகளை இழந்து பொருளாதார மற்றும் மனோ ரீதியாக  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களுடைய முதல் பிரச்சினையாக உள ரீதியான பிரச்சினையே இருந்து கொண்டு இருக்கிறது.  சகோதரர்களை மனைவிமார்களை;, குழந்தைகளை இழந்து தவிக்கிறார்கள். இப்போது மனம் நொந்துபோய் இருக்கிறார்கள். 

அடுத்த கட்டமாக வெள்ளம் வந்த பகுதியெங்கும் நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் எவ்வகையிலான நோய்களும் பரவாமல் தடுப்பதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.   இவர்கள் உடன் இயல்பு நிலைக்குச் செல்வது மிகவும் கடிமான காரியம். எனவே நிவாரணப் பணி என்பது சாதாரண பணியல்ல இவ்வருடம் முழுமையாக இந்த மக்களை கட்டி எழுபபுவதற்காக கட்டாய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

உலமாக்கள் என்ற ரீதியில் மக்களுக்கு சரியான வழிகளைக் காட்ட வேண்டும். பிரச்சாரப் பணிகளில் இது முக்கியமான அம்சமாகும். மிம்பர் மேடைகள் இதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அனர்த்தங்கள் வரும் போது உலமாக்கள் நிதானமாக நின்று சமூகத்தை வழிநடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவை எவை என உணர்ந்து செயற்பட வேண்டும். நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு  எதைச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உணர்த்த வேண்டும். 

குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமாக களத்தில் இறங்கி மக்களோடு தொடர்பு கொண்டு  நிறை முயற்சிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். குருநாகல் நகரில் மட்டும்  இது வரை 13 இலட்சத்துக்கு மேல் சேர்ந்துள்ளது. அல்லாஹ்வுடைய உதவி அந்த மக்களுடைய தேவை அந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 24 கிளைகளிலிருந்து 50 இலட்சம் ரூபா  காசாக மட்டும் சேகரிக்க முடியும் என மாவட்ட செயலாளர் தற்போது என்னிடம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஆர்வம் காட்ட வேண்டும். உலமாக்களே நாங்கள் தியாகம் செய்ய வேண்டும். எனக்கு நிதி உதவி வழங்கு வதற்கு சக்தி இல்லை. தம்மிடம் இருக்கிறதைக் கொடுக்க வேண்டும் என்ற நிலை நாங்கள் வழிநடத்த வேண்டும். நிதி உதவி விடயத்தை நாங்கள் வழியுறுத்திக் கூற வேண்டும். அதேவேளை நாங்களும் முன்மாதரியாக இருக்க வேண்டும். இது ஒரு பாரிய பொறுப்பு வாய்ந்த வேலைத் திட்டம். நாம் மழை நின்று விட்டது எல்லாம் சரி வந்து விட்டது என எவரும் நினைக்கக் கூடாது. குறிப்பாக றமழானுடைய மாதம் இந்த மாதத்தில் அந்த மக்கள் எப்படி சிரமப்பட போகின்றார்கள். துன்பப் படப் போகின்றார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் புரிய வேண்டிய விடயமல்ல. 

இக்பால் அலி

No comments

Powered by Blogger.