கரி பூசிய ஹக்கீம் - ஹிஸ்புல்லா பாராட்டு
சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளமை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு சாட்டை அடியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அதேவேளை, இவ்வறிவிப்பு இனவாதிகளின் முகங்களில் கரி பூசும் வகையில் அமைந்துள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் - சந்தேகங்களுக்கும் ஹக்கீம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்; நஸீர்; அஹமட் கடற்படை அதிகாரியுடன் முரண்பட்டமையினால் முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்பட்டது. இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் சில ஊடகங்களும், அமைப்புக்களும் திரிவுபடுத்தி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்தை ஏற்படுத்த முற்பட்டது.
குறிப்பாக இணையதளங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அதுமட்டுமல்லாது, மட்டக்களப்பு நகரில் முதல் முறையாக முஸ்லிம்களுக்கு எதிராக பிக்குகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இச்சந்தப்பத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மட்டு. நகர வியாபாரிகள் பொறுமையாக இருந்தனர்.
அவர்கள அன்று பொறுமை இழந்திருந்தால் மிகப்பெரிய கலவரமே வெடித்திருக்கும். இந்த அசாதாரண நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருந்த கிழக்கு முதல்வரின் செயற்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டித்துள்ளதுடன், எவ்வித நிபந்தனையும் இன்றி பகிரங்க மன்னிப்பு கோருமாறும் தெரிவித்துள்ளார்.
மு.கா. தலைவரின் இந்த நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் - சந்தேகங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். –என்றார்.

ReplyDeleteமு.கா. தலைவரின் இந்த நடவடிக்கை அல்லது அறிக்கையின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கும் - சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது முஸ்லிம் சமூகத்தால் ஏற்க முடியாத ஒரு கருத்தாகும். முதலமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் ஒருபுறமிருக்க, அவரது அந்நடவடிக்கை தொடர்பில் சிங்கள பேரினவாதிகள் மிகைப்படுத்தப்பட்ட அளவில் - ஒரு பக்கச்சார்பான இனக்கூச்சலை மேற்கொள்வதுதான் இங்கு பிரதான பிரச்சினையாகும் என்பதை முக்கிய அரசியல்வாதிகளே உணர தவறுகின்றார்களோ அல்லது வேறு என்னவோ தெரியவில்லை. இதே விதமான நடவடிக்கை ஒன்று வட, கிழக்கு தவிர்ந்த வேறொரு மாகாணத்தில் நடைபெற்று அதில் ஒரு சிங்கள முதலமைச்சரும் ஒரு முஸ்லிம் படை அதிகாரியும் இதே விதமாக செயற்பட்டிருந்தால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்? என்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். எதிலும் எவர்க்கும் பாரபட்சம் இருக்கக்கூடாது.
இதே இடத்தில் முதலமைச்சர் ஒரு சிங்களவராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” என்று ஜனாதிபதியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ReplyDeleteNow Ellor muhatthilum KARI poosi vittaar President Maithiri paala...
ReplyDeleteThank you very much Sir....We salute you...
Result of Violating PROTOCOL .. Hope government will ensure no body violate PROTOCOL in future.
ReplyDeletethis issue being delt by president and Priminister, it is better to leave them to decide.
ReplyDeleteஒரு சிறந்த தலைவர் எடுக்
ReplyDeleteஒரு நல்ல தலைமைத்துவத்தின் தீர்ப்பு பகிரங்கமாக மன்னிப்புக் கேள் என்பதாக இருக்க மாட்டாது. இது பேரினவாதிகளை திருப்திபடுத்துவதற்காக ஏடுக்கப் பட்ட முடிவு,சரணாகதி அரசியல் செய்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.
Majeed
ReplyDeleteThe society you want to live is, still under construction.
You are absolutely right . C M is right about the protocol
and wrong about his reaction against breaking it . And on
top of that , he was irresponsible in the way he reacted
in public , at a time racists are trying to raise their
ugly heads again . Respect should not be so harshly
extracted ! Mr. Naseer should know that . This kind of
behaviour , once enough and people will never forget .
He has supplied ammunition to the racists .
இனவாதிகளே இதை தூக்கிப் பிடித்தார்களே தவிர ஏனையோர் இவ் விடத்தை கனக்கெடுக்கவில்லை என்பதே உன்மை.இதனால்தான் ஹகீம் அவர்கள் அப்படி சொல்லி இருக்கலாம்.ஜனாதிபதியும் இப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.அது இருக்க எனக்கு ஒரு சந்தேகம் இது ஒரு தமிழ் ஊடகம் இதில் பிண்ணூட்டம் இடுபவர்களுக்கு ஆங்கிளம் தெரிந்திருந்தாலும் அழகு தமிழில் பிண்ணூட்டம் இடுவதே நாகரீகம் என நினைக்கிறேன்.இது சரியா? பிழையா?
ReplyDeleteHakeem's life cycle - liberal after election with full court n suit to please majority n ruling class - during election time, with a Muslim cap will talk only Islam - what a shameless hypocrite....
ReplyDelete