இந்த முடிவுக்கான காரணம் பற்றி, நான் எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை - நசீர்
என்மீது தடை விதித்தவர்களே அதனை நீக்கினார்கள். இத்தகைய நிர்வாக மனநிலை மாற்றம் வரவேற்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படைகளின் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததையடுத்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 20ம் திகதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவருக்கும் முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது முதலமைச்சரால் கடற்படை அதிகாரி மீது கடும் வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து முப்படைத் தலைமைகள் கூடி முப்படைகளின் தளங்களுக்குள் முதலமைச்சர் நுழைவதற்கு தடை வித்தித்துடன் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை முப்படைகள் புறக்கணிக்கப் போவதாகவும் தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக இராணு பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கூறியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் குறிப்பிடுகையில்
இந்த முடிவைத் நான் வரவேற்கின்றேன். தடை விதிக்கும் தீர்மானத்தை யார் எடுத்தார்களோ அவர்களே முன்வந்து அத்தடையையும் நீக்கியிருக்கின்றார்கள்.
இந்த முடிவுக்கான காரணம் பற்றி நான் எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை என்றார்.

எதுஎப்பிடி இருந்தாலும் முதல்அமைச்சர் அவர்களே முதலில் அல்லாஹ்வுக்கு சுகுர் செய்யுங்கள் ஏனென்றால் கிழக்கு மாகான முதல்அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகிய உங்களை சரியாக யார் என்றே தெரியாமல் இருந்த அநேகமான முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்களும் இந்த ஒரு சம்பவத்தின் முலம் அடையாளம் கண்டுகொண்டார்கள். சுருக்கமாக சொன்னால் பிரபல்யமாகிவிட்டீர்கள். காசு செலவு இல்லாமல் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச வலையமைப்புகளிலும் கூட ஒருவார காலமாக நீங்கள்தான் கலக்குரீங்க. இனி உங்கள் படத்தைப் பார்த்த உடனே சின்னப் பிள்ளை கூட உங்கள் பெயரை சொல்லிவிடுவார்கள்.காரணம் கழுத்துக்கு மேலே எல்லாம் வெள்ளையாக தெரிகிரதே அதுதான். ஆகவே இந்த விளம்பரம் போதும்.இது போன்ற இன்னுமொரு சம்பவம் வேண்டா....ம்
ReplyDeleteit is better to silence now.
ReplyDelete