Header Ads



வெள்ளத்தின் போது, இப்படியும் ஒரு மனிதர்

வெள்ளத்தில் சிக்குண்ட ஒருவருக்கு நிவாரணமாக கிடைக்கப்பெற்ற உணவு பொதியை 100 ரூபாவிற்கு விற்ற சம்பவம் களனி கங்கையை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் வீடுகள் தொழிற் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல நீரில் மூழ்கின.

இந்நிலையில் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய நபர் நீச்சல் தெரியாத காரணமாக நிறுவனமொன்றுக்குள் சிக்கி கொண்டார்.

குறித்த நபரை மீட்க யாரும் வராதமையால்  3 நாட்களாக மேசை ஒன்றின் மீது இருந்து வந்துள்ளார்.

இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருளில் நுளம்புகடிகளுக்கு மத்தியில் மிகவும் சிரமத்துடன் இருந்துள்ளார்.

ஒரு நாள் காலை வேளையில் குறித்த நபர் மேசையின் மீது தலையை வைத்து படுத்தியிருக்கும் போது ஒருவர் வந்து உணவு வேண்டுமா எனக்கேட்டுள்ளார்.

அதற்கு குறித்த நபர் தன்சலா என்று வினவியதையடுத்து, ஒரு உணவு பொதி 100 ரூபாவென கூறியுள்ளார்.

பாக்கெட்டில் 300 ரூபா மாத்திரமே வைத்திருந்த இவர், இரு நாட்களாக பிஸ்கட்டுகளை மாத்திரமே உண்ட காரணத்தினால் உணவு பொதியொன்றை அவரிடமிருந்து 100 ரூபாவிற்கு வாங்கியுள்ளார்.

உணவினை வழங்கிய நபர் குறித்த நபரை வெளியே செல்ல வேண்டாமெனவும் நீரோட்டம் அதிகமாக காணப்படுகின்றதெனவும் பகல் உணவு குறித்து கவலை கொள்ள வேண்டாம் தானே கொண்டு வந்து தருவதாகவும் கூறிச்சென்றுள்ளார்.

இருட்டில் நுளம்பு கடியை பொறுத்துக்கொள்ள முடியாமல் குறித்த நபர் மருந்து வாங்குவதற்காக வெளியே வந்த போது மக்கள் வேனொன்றின் முன் வரிசையாக நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.

குழப்பமடைந்த அவர் காலையில் சந்தித்த நபரும் வரிசையில் நின்று கொண்டிப்பதை அவதானித்துள்ளார்.

வரிசையில் இருந்த நபர் அவரை கண்டதோடு, அவர் எதற்காக வெளியே வந்தாரென வினவியதுடன் அவருக்கான பகல் உணவை தானே கொண்டுவரயிருந்ததாகவும் காலையிலும் இவர்களே தனக்கு உணவு அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு குறித்த நபர் அதிர்ச்சியடைந்ததுடன் மேற்கொண்டு எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டுச்சென்றுள்ளார்.

2 comments:

  1. என்ன கதை இது ?? நம்புறமாதிரி சொல்லுங்க சார்!
    3 நாள் உள்ள இருந்தவன் உதவு கேக்க கூட வெளியில் எட்டிப்பார்க்கவில்லையா? வந்தவனிடம் எப்படி வந்தான் என்று கேட்டிருக்க மாட்டாரா? குறைந்தது அவரின் போனை வாங்கி யாரையாவது / உறவினர்களையாவது உதவிக்கு அழைத்திருக்க மாட்டாரா? 3 நாள் உள்ள இருந்து பிஸ்கட்டுடன் காலம் கழித்தவனுக்கு சோறு தின்பது முக்கியமா , உதவி வாங்கி வெளியே போவது முக்கியமா???
    இவ்வளவுக்கும் அவன் ஒரு பாதுகாப்பு ஊழியர்.
    Jaffna Muslim இக்கட்டுரையை பதிய முன் கொஞ்சம் வாசித்துப்பார்ககமாட்டீர்களா???
    உங்கள் வாசகர்கள் அனைவரும் மடையர்கள் என்று நினைத்தார் போலும்!

    ReplyDelete
  2. Shame on this un logical article.

    ReplyDelete

Powered by Blogger.