அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள், சம்மேளன ஸ்தாபகர் தின நிகழ்வு
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன (ACUMLYF) ஸ்தாபகர் தின நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு கொழும்பு 10, D.R. விஜேவர்தனா மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கட்டிட பிரதான கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் B.M. பாறூக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பல்லின சமூகத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கும் உரிய சந்தர்ப்பத்தை வழங்குவதுதன் மூலம் சமூக இனநல்லிணக்கத்துக்கும், ஒற்றுமைக்கும் முன்னின்று செயற்படும் செயற்படும் ACUMLYF பல வருட காலமாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பல இளம் அரசியல் தலைமைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இன நல்லுறவை மேம்படுத்துவதிலும், குறிப்பாக நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வுகாண்பதிலும் அரசு பரிய முயற்சி எடுத்துவரும் வேளை , இந்நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பெரும் தலைமைகளான எதிர்கட்சித் தலைவர் கௌரவ. ஆர். சம்பந்தன் அவர்கள் பிரதம அதிதியாகவும், நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாளி சம்பிக ரணவக அவர்கள் பிரதம பேச்சாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ACUMLYF இன் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற சபாநாகருமான மர்ஹும் தேசமான்ய M.A. பாகிர் மாகார் அவர்களுடன் ACUMLYF இன் உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் முன்நின்று உழைத்த மர்ஹும் ஜாபிர் ஏ. காதர், ரிஸ்வி சின்னலெப்பை, A.M. நஸீர், Y.L.M. மன்சூர், மஸாஹிம் மொஹிடீன், நவாஸ் கபூர், மனாப் ஷெரீப், மஷுர் மௌலானா, ராஸிக் மரிக்கார், ஜுனைடீன், அல்ஹாஜ் அஸ்ஹர் (முன்னாள் நவமணி ஆசிரியர்), S.K.ஷாஹுல் ஹமீத் (காயல் பட்டனம், இந்தியா), மஷுர் கவுஸ், காதர் எம். அலி, A.R.M. ஸைன், ஷபீக் ஆகிய பல ஸ்தாபக உறுப்பினர்களும் நினைவுகூறப்பட்டு, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்படவுள்ளது.
ACUMLYF மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பேரவைகளின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தொிவுசெய்யப்பட்ட சில பாடசாலை மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்படவுள்ளது.

Post a Comment