ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக, லண்டனில் ஆர்ப்பாட்டம் - தமிழர் அமைப்பு அழைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிரப்பு தெரிவித்து நாளை -11- ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரித்தானியா தமிழ் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானிய வாழ் தமிழர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக நாளை காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் பொது நலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் வரவுள்ளார்.

Post a Comment