Header Ads



நசீர் விவகாரம் - மைத்திரி, ரணில், ஹக்கீம் தொலைபேசியில் பேச்சு

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை அவதூறு செய்ததன் பின்னர் இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிவுறுத்தல் தொடர்பில், பிரதமரும் ஜனாதிபதியும் சந்திக்கவுள்ளனர்.

ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சம்பூர் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, தமக்கு முதலமைச்சர் என்ற ஒழுங்கு அடிப்படையில் மரியாதை தரவில்லை என்றுகூறி கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு முதல்வர் தூற்றினார்.

இதனை அடுத்து கிழக்கு முதல்வரை படைமுகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினர் பங்கேற்பதில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கிடையில் இதுதொடர்பில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இதேபோன்று நசீர் அஹ்மட் விவகாரம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மறறும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது

No comments

Powered by Blogger.