Header Ads



நசிர் அஹ்மட்டுக்கு, ஆதரவாக சம்பந்தன்

ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் காட்டிக் கொண்டு படையினர் குறிப்பாக கடற்படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதவை மாத்திரமல்ல எதிர் விளைவுகளை உண்டாக்க முயலும் செயற்பாடுகளாகும். இதுவே கிழக்கு மாகாண முதல் அமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் ஏற்பட்ட முரண்பாடு ஆகும் என்று  எதிர்க்கட்சித்தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை கச்சேரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட இணைக்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் கௌரவம் அந்தஸ்து பதவி நிலை காப்பாற்றப்பட வேண்டும். கவனிக்கப்பட வேண்டும். அவரை அவகௌரவப்படுத்தும் வகையிலோ பதவியை உதாசீனம் செய்யும் வகையிலோ யாரும் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்வது பண்பற்ற செயலாகும்.

சிவில் நிர்வாக விடயத்தில் பல்வேறு காரணங்களையும் கூறிக் கொண்டு படைத்தரப்பினர் நுழைவது தவிர்க்க வேண்டும்.

2 comments:

  1. ப்பா என்ன ஒரு வேகம் இப்போது தான் தூக்கத்தில் இருந்து எழும்பியிருப்பார் போல் கனவுகளில் வாழ்வதால் தான்் எதிர்கட்சி தலைவருுக்கு இந்த நிலைமை

    ReplyDelete
  2. Poiya, unnai muthalil thiruththikka. Neeye yosikkath theriyathavanachche.

    ReplyDelete

Powered by Blogger.