Header Ads



"மஹிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை, நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் அல்ல"


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

கிருலப்பணை மே தினக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மஹிந்த ராஜபக்சவை நேசிக்கும் தரப்பினராகும்.

கிருலப்பணைக்கு சென்றவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரச்சினை கிடையாது. கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்திய தரப்புடனேயே எமக்கு பிரச்சினை உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பில் சில ஊடகங்கள் பிழையானதும், பொய்யானதுமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பி.க்கு எதிரான செய்தி அதன் தலைமையை எவ்வாறு பாதித்துள்ளது என்பதனை அறிய முடிகின்றது. எமது கட்சித் தலைமை மீதும் இவ்வாறு சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதன் மூலம் கட்சித் தலைமைக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்பதனை உணர முடிகின்றது என டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.