Header Ads



நசீர் மன்னிப்பு கேட்க, வேண்டுமென்பது தவறானது - ஹசன் அலி எதிர்ப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel-

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சம்பூர் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கடற்­படை தள­ப­தி­யுடன் நடந்து கொண்ட விதம் தொடர்­பாக அவர் மன்­னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரப்­ப­டு­வது தவ­றாகும்.

ஒருவர் தவறு செய்­தி­ருந்­தாலே மன்­னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நடை­பெற்ற சம்­ப­வத்­துக்கு மன்­னிப்பு கேட்க வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் இது தொடர்­பாக அவர் கருத்து தெரி­விக்­கையில்;

 இது தொடர்­பாக கட்சி இது­வரை எவ்­வித பேச்­சு­வார்த்­தையும் நடத்­த­வில்லை. இச் சம்­ப­வத்­துக்கு முக்­கி­ய­ம­ளித்து சிலர் இன­வா­தத்தை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர். முத­ல­மைச்சர் மாத்­தி­ர­மல்ல வேறு எவ­ரென்­றாலும் தனது தன்­மா­னத்­துக்கும் கௌர­வத்­துக்கும் சவால்கள் ஏற்­பட்டால் உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வது இயல்­பாகும்.

முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ­மட்­டுக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்­தி­ருந்தால், அவ­ருக்கு மேடையில் கதிரை ஒதுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இதனை ஆளுநர் விழா ஏற்­பாட்­டா­ளர்கள் மூலம் செய்­வித்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவர் மேடைக்கு அழைக்­கப்­பட்டு அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.

இத­னா­லேயே முத­ல­மைச்சர் உணர்ச்சி வசப்­பட்டு கடற்­படை தள­ப­தியைப் பேசி­யி­ருக்­கிறார். ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத வேளை அவரை ஆலோ­சிக்­காது முப்­படை முகாம்­க­ளுக்கு விஜயம் செய்­வது அவ­ருக்கு தடை செய்­யப்­பட்­டி­ருப்­பதும் தவ­றாகும்.

இச் சம்­பவம் தொடர்பில் விசா­ரிக்க உயர்­மட்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு பின்னணியை ஆராய்ந்தே தீர்வுகள் பெறப்பட வேண்டும்.

அதை விடுத்து அவரை மன்னிப்பு கேட்கச் சொல்வதும் இராஜினாமா செய்யச் சொல்வதும் ஆரோக்கியமானதல்ல என்றார்.

அதேவேளை நசீர் அஹ்மட் மன்னிப்பு கேட்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் நேற்று வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


14 comments:

  1. No comments on what is said by Mr. Hassan. But as largely expected Mr.Hakeem has further strengthen his stability in retaining his position as the usual way where he always demonstrated a selfish commitment. The majority of the Muslim community expected that Hakeem will ask the CM to apologize. This is our fate !

    ReplyDelete
  2. இப்படி முதுகெலும்புள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இருப்பது மனதிற்கு ஓரளவு ஆறுதல்

    ReplyDelete
  3. உண்மையான விடையம்

    ReplyDelete
  4. The problem is almost finished by MR. Rauf Hakeem (I'm not a personal supporter of him. Even though whether if Mr. Nasir was did right or not. But the medias and people like MR. Hasan Ali and co are not ready to make full stop to this continuing issue and they should rethink before talking or publishing anything because of it is depended on society as well as It will be continue by more people until they will get another hot news. Nowadays this is the main problem of our people,society and medias mentality .

    ReplyDelete
  5. The way the Naval officer behaved in Sampur was a disgrace to the offices of Chief Minister. Equally, the Chief minister should have controlled his temper and handled the issue officially and professionally. It was the Naval officer who blundered and behaved like a bull in a china shop but due to the reaction by the Chief Minister, he became an overnight Hero! All the racist elements that are waiting to shoot their voices in air are in celebration. In my opinion, the both the offices of Naval and Eastern Province Chief Ministry should tender their apology. Not just the Chief Minister! I hope our President and Prime Minister will look at this issue beyond the racist agenda!

    ReplyDelete
  6. உண்மைக்கு அழிவுஇல்லை

    ReplyDelete
  7. மண்ணிப்பு எதற்காக கேட்க வேண்டும்

    ReplyDelete
  8. உண்மைக்கு அழிவுஇல்லை

    ReplyDelete
  9. They forced the chief minister situation of excitement by snitching his authority over the function and now they complain about his act.

    For the sake of defeating RACIST elements... Ahmed Nazeer may apologies for his emotional mistake. BUT who will give justice to Chief minister for insulting him to this level in public? Will the law warn the Monk who pointed finger at Chief minister without authority?

    ReplyDelete
  10. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் இருந்தி
    ருந்தால் சகோ, ஹசனலி எடுத்த முடிவையே எடுத்திருப்பார்.

    ReplyDelete
  11. கிழக்கு மக்கள் இழிவடைவதில் மு.கா.தலைவருக்கு அப்படியென்ன திருப்தியோ?

    ReplyDelete
  12. ஹசன் அலி அவர்களே, முதல் அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் ஒரு பொது வைபவத்தில் எப்படியான சூழ்நிலையிலும் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அப்படி நடந்து கொண்டதற்காக கட்டாயம் தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்ளவே வேண்டும். அதுதான் நல்ல மனித பண்பாகும். அதிலும் நாம் முஸ்லிம்கள் பண்பும் நாகரிகமும் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லவா. இதன் அர்த்தம் கடற்படை அதிகாரியோ, ஆளுனரோ சரி என்று அர்த்தம் இல்லை. அவர்கள் செய்தது மிகவும் பாரதூரமான கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். சரியான வழிமுறைகள் மூலம் இந்த பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும். அடுத்தது கட்சி தலைமை ஒரு விடயத்தை கூறி இருக்கும் அதற்கு மாற்றமான கருத்தை அறிக்கை மூலம் தெரிவிப்பது நல்ல விடயமாக தெரியவில்லை. அதை கட்சிக்குள்ளேயே தீர்த்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. ஹசன் அலி அவர்களே, முதல் அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் ஒரு பொது வைபவத்தில் எப்படியான சூழ்நிலையிலும் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அப்படி நடந்து கொண்டதற்காக கட்டாயம் தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்ளவே வேண்டும். அதுதான் நல்ல மனித பண்பாகும். அதிலும் நாம் முஸ்லிம்கள் பண்பும் நாகரிகமும் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லவா. இதன் அர்த்தம் கடற்படை அதிகாரியோ, ஆளுனரோ சரி என்று அர்த்தம் இல்லை. அவர்கள் செய்தது மிகவும் பாரதூரமான கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். சரியான வழிமுறைகள் மூலம் இந்த பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும். அடுத்தது கட்சி தலைமை ஒரு விடயத்தை கூறி இருக்கும் அதற்கு மாற்றமான கருத்தை அறிக்கை மூலம் தெரிவிப்பது நல்ல விடயமாக தெரியவில்லை. அதை கட்சிக்குள்ளேயே தீர்த்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  14. @Irshad Wahab! Well said. The way CM bahaved was appalling having said that when it comes to public apology both the government officials CM and the Navy Officer should ask.
    Selfish Politicians and the Racist are trying to milk on this situation.
    Rauf Hakeems comment also a Selfish one so does Hassan Ali's comment.

    ReplyDelete

Powered by Blogger.