Header Ads



இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகுகள், முதன்முறையாக வெளிநாடுகளுக்கு விற்பனை


இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடற்பாதுகாப்பு படகுகள் 09 நைஜீரியா நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடலோரக் காவல்படை கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. 

வெளிநாடொன்றிற்கு இலங்கையின் படகுகள் விற்பனை செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதன்மூலம் பெறப்பட்ட வருமானம் சுமார் 60 கோடிகள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 

கப்பல்களை கொள்வனவு செய்யும் போது நைஜீரிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையிலுள்ள நைஜீரிய நாட்டின் தூதுவர் எஸ்.யூ. அஹமட் கலந்து கொண்டிருந்தார். 

1994ம் ஆண்டில் இருந்து அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப இருந்த கேள்விகளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் சிறிய ரக கப்பல்கள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 

இறுதி யுத்த காலத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இந்தப் படகுகள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. 


No comments

Powered by Blogger.