Header Ads



பெற்ற தாயை விரட்டிவிட்டு, வீட்டை எரித்த மகன் - வத்துவயில் அதிர்ச்சி

-Vi-

மகனொருவர் தனது தாயை வீட்டை விட்டு விரட்டியதுடன் அவர் வசித்து வந்த வீட்டையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இச்சம்பவமானது வத்துவ-மொராந்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது தாய்க்கு சொந்தமான நிலத்தையும் வீட்டையும் தனது பெயரிற்கு எழுதி தருமாறு, தாய் வசித்து வரும் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார்.

தாய் அவரது கோரிக்கைக்கு உடன்பட மறுத்ததையடுத்து, அவரை தாக்கியதுடன் வீட்டையும் தீக்கிரையாக்கியுள்ளார்.

குறித்த நபர் அத்தாயின் 2 ஆவது மகனென தெரியவந்ததையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இவர் ஒரு பஸ் வண்டியின் உரிமையாளர் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.