"இலங்கையின் துயரங்களில், துருக்கி பங்குகொள்ளும்"
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை துருக்கி செம்பிறை சங்கம் (Turkish Red Crescent) வழங்கியுள்ளது.
இதன்படி, கூடாரங்கள், பிளங்கட் மற்றும் சோலார் கிட் போன்ற பொருட்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கியின் மனிதாபிமான அமைப்பான செம்பிறை சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துருக்கியின் இந்த உதவிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நன்றி தெரிவித்துள்ளதோடு, சுனாமியின் பின்னர் துருக்கி செம்பிறை சங்கத்தால் இலங்கையில் 250 வீடுகள் அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கை இதனை ஒருபோதும் மறக்காது எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் துயரங்களில் துருக்கி பங்குகொள்ளும் என குறிப்பிட்ட இலங்கைக்கான துருக்கித் தூதுவர், முடிந்தளவு விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment