Header Ads



களனி பல்கலைக்கழகத்திலேயே, அதிகளவில் பாலியல் பகிடிவதைகள் - பேராசிரியர் சுனந்தமத்துகம

அகில இலங்கை மட்டத்தில் பாலியல் ரீதியான பகிடிவதைகள் களனி பல்கலைக்கழகத்திலேயே அதிகளவில் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனந்த மத்துகம பண்டார தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழகத்தில் இன்று -08- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பகிடிவதை பல தசாப்தங்களாக நடைபெற்று வருவதாகவும், இவ்வாறான பகிடிவதைகளினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவானோர் இது பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க முன்வருவதில்லை என தெரிவித்தார்.

இதனால் களனி பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகளை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாகவே புதிதாக வரும் மாணவர்கள் மனஉளைச்சல்களுக்கு உள்ளாவதுடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

சமூக அமைப்புக்களும், பெற்றோரும் இது சம்பந்தமாக அறிந்து, இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் எனவும் உப வேந்தர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான பகிடிவதை தவறுகள் நடைபெறுவதை தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக ஆர்வலர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஜம்மியத்துல் உலமா சபை , இது தொடர்பாக முஸ்லிம்கள் பால் கவனம் செலுத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது போலும்

    ReplyDelete
  2. அங்கு நடக்கும் அநியாங்கள் ஏகப்பட்டது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் குறுகியது.கடந்த வருடம் நடந்த சில கொடுமைகள் வருமாறு...

    1. கொச்சிக்காய் திண்ண கொடுத்தல்.
    2. ஆண் பெண் மாணவிக்கு i Love you சொல்லல்.
    3.Senior மாணவர் junior மாணவிகளிடம் ,யாருக்கு பேசி வெச்சிருக்கு எண்டு விசாரித்ததில்,விசாரித்த பின் அவர்களின் பதிலுக்கு அமைய தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்தல். இது நடப்பது Lecture Hall இல்.
    4.குடை கொண்டு போக முடியாது.
    5.வெறும் காலுடன் நடத்தல்.
    6.ஆண் ,பெண் அனைவருக்கும் ஒரே டொபி இணை சாப்பிட வழங்குதல்.
    7.junior ஆண் இணை வித்து சீனியர் மாணவியினை marks போட்டு மதிப்பிடல்.
    8.Normel Black colour Bata மட்டுமே அணியலாம்,பெண் மாணவிகள்.
    9.கை குட்டை பாவிக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.