Header Ads



களனி கங்கையின் நீர், இரசாயன நச்சுத் தன்மை - மேஜர்ஜெனரல் சுதந்த

-Vi-

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக  களனி கங்கையின் நீர் இரசாயன நச்சுத் தன்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக மேல்மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பின் பலபகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையில் அதிகமான வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளே சுத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளன.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட வீடுகளின் வெள்ள நீரில்  விசக்கிறுமிகளின் தாக்கம் காணப்படுவதால்,  வீடுகளை சுத்தம் செய்வதற்கு இரசாயன கலவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த இரசாயன கலவைகள் களனி கங்கையில் கலக்ககூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளநீர் வடிந்தோடும்போதும் சுகாதார பிரச்சினைகள் காணப்படுவதால் மக்கள் தங்களது சுகாதார விடயங்களில் அவதானமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.