Header Ads



வசிம் தாஜூடின் கொலை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் நழுவமுடியாது - ரஞ்சன்


பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் நழுவிக்கொள்ள முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 29.05.2016 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் பிரபல்யமான ரகர் வசிம் தாஜூடினின் கை கால்கள் உடைக்கப்பட்டு, தொடைப் பகுதி கிழிக்கப்பட்டு இரகசிய உறுப்புக்கள் கண்ணாடி துண்டுகளினால் தாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள்? கிருலப்பணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோர் தொடர்புபட்டிருக்கின்றார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனும் நழுவிக்கொள்ள முடியாது.இளங்கக்கோன் இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு வாசித்து பின்னர் அதனை திருப்பி அனுப்பி விட்டதாக கேள்விபட்டோம்.

அதாவது உண்மையைத் தெரிந்து கொண்டு அமைதியாக இருந்துள்ளார். கொலையொன்றுக்கு உதவுவது மறைமுகமாக அதனைப் பார்த்து பேசாமல் இருப்பது அல்லது நேரடியாக உதவுவது எல்லமே ஒன்றுதான்.

எனினும் மக்களின் பணத்திலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு கொலையைப் பார்த்து விட்டு பார்க்காதது போல் இருப்பது பிழையானதாகவும்.இவ்வாறான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டுமென ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Very good point.but our country law not allowed to do this

    ReplyDelete

Powered by Blogger.