இனத்துவேசப் புரளியொன்று, கட்டவிழ்த்து விடப்பட்டு உலாவிக்கொண்டிருக்கிறது - ஹக்கீம்
(JM.Hfeez)
மடவளை மதீனா மத்திய கல்லூரி சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்றை மேற்கொள்ளும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி நீர்வழங்கள் அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்தார்.
(29.5.2016) யடிநுவர தொகுதியிலுள்ள தெஹியங்க, அல் இல்மா ஆரம்பப் பாடசாலையில் இடம் பெற்ற ஒரு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
தமது சுய நல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முழ சமூகத்தையும் தவறானவர்கள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் இட்டுக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படகின்றன. இவ்வாறான ஒரு சம்பவமாக இதுவும் உள்ளது.
தேசிய நல்லிணக்கத்திற்காகப் பாடுபடும் இவ்வேளை சிலர் திட்டமிட்ட அடிப்படையில் இணங்கனுளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளதைக்காண முடிகிறது. எனவே சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்கள் மூலம் காற்றில் பரக்கவிடப்படும் தவறான தகவல்களை பின்னர் எம்மால் தடு:த்து நிறுத்த முடியாது போகும். எனவே மடவளை மதீனா மத்திய கல்லூரி தொடர்பான விடயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல, பொதுவாக நாடறிந்த ஒரு பாடசாலையாக மடவளை மதீனா இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக என்னால் அப்பாடசாலைக்கு அதிகளவு பங்களிப்புச் செய்ய முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் பாதிக்கு மேல் எனது முயற்சியால் வழங்கப்பட்டவைகளாகும். அங்குள்ள பிரமாண்டமான கேட்போர் கூடத்தையும் நானே வழங்கினேன். கண்டி மாவட்டத்தில் எங்கு மில்லாத ஒரு கேட்போர் கூடமாக அது உள்ளது.
அப்படியான ஒரு பாடசாலை நீண்டகாலமாக பல துறைகளிலும் தடம் பதித்து வந்துள்ளது. இதனால் எனது விசேட கவனம் அப்பாடசாலை மீதிருந்தது. இருப்பினும் அண்மைகாலமாக அப்பாடசாலை படிப்படியாக தரம் குறைந்து வருவதாக பெற்றோர் மற்றும் பழைய மாணவர் மத்தியில் ஒரு ஆதங்கம் இருந்து வந்தது. தற்போது எதுவும் இல்லை என்று கூறுமளவு அதன் நிலை பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இப்படியான சூழ் நிலையில் கடந்த 4ம் திகதி பாரிய ஓரு ஆர்பாட்டம் இடம் பெற்றது.
அதன் அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வலயக்கல்விக் காரியாலயம், கல்வி அமைச்சு போன்றவை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் அதனை திசை திருப்பும் வகையில் ஒரு இனத்துவேசப் புரளியொன்று கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று அது சர்வதேச வளையமைப்புக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உலாவிக்கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக முஸ்லிம்கள் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாக இதனைக் காண்கிறேன். ஏனெனில் ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் போலீயாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதம் அங்குள்ள முஸ்லிம் அல்லாத அசிரியர்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கும் ஒரு விடயமாகும். இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஆசிரியயையின் கணவர் எனக் கூறும் ஒருவர் சமூக வளைத்தளங்களில் செய்திகளை கசிய விட்டுள்ளார். அது இன்று ஒரு சமூகப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இது முழுக்க முழுக்க போலியானதாகும். குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி நடவடிக்கையில் இறங்கிய குழுவின் பெரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் இதனை மேற்கொண்டார்கள் எனக்காட்டும் ஒரு செய்தியாக அது வெளியாகியுள்ளது. ஆனால் அக்குழுவினர் தாம் அப்படி ஒன்றைச் செய்ய வில்லை என்பதும் இது சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு அவதூரு என்றும் அவர்கள் தெரிவித்து வருவதாக அறிய முடிகிறது. எனவே இதன் உண்மை நிலையை அறிந்து அதனை வெளிப்படுத்துவதற்காக புலனாய்வுப் பிரிவினரிடம் இச்சம்பவத்தை ஒப்படைக்க உள்ளேன்.
எனது தந்தை ஒரு அதிபர் என்ற வகையில் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் இடமெல்லாம் நானும் பாடசாலை மாறிச் சென்று கல்வி கற்றதனால் நான் ஐந்து பாடசாலைகளில் பழைய மாணவனாக இருந்துள்ளேன். அத்துடன் பாடசாலைகளில் தங்கி இருந்ததால் சிறு வயது முதலே எனக்கு அதிபர்கள் மற்றும் கல்வி தொடர்பான விடயங்களுடன் நெருக்கம் இருந்து வந்துள்ளது என்றார்.
அது எப்படியானாலும் ஒரு சுயநல நோக்கிற்காக ஒரு சமூகத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியை ஆதரிக்க முடியாது. இன்று சிங்கள – முஸ்லிம் உறவு நன்றாக உள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் கடமை புரியும் சிங்கள ஆசிரியர்கள் மிகத் திறமையாகக் கடமை புரிவதுடன் புரிந்துணர்வுடன் அவர்கள் நடந்து கொள்கின்றனர். அப்படியான நேரத்தில் தவறான வதந்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்க முடியாது.
எனவே வெகு விரைவில் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் உண்மை நிலை பெறப்படும் என்றார்.

Post a Comment