அலரி மாளிகையில் புத்தர் சிலைக்கு சேதம், சூடுபிடிக்கிறது விவகாரம்..!
புத்தர் சிலையொன்று பலவந்தமாக அலரி மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் கலாச்சார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,அலரி மாளிகையில் நடைபெற்ற பௌத்த சின்னங்களின் கண்காட்சி ஒன்றுக்காக மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் சிலையொன்று அருங்காட்சியகத்திலிருந்து அலரி மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது சிலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அரச தலைவரின் அனுமதியின்றி இவ்வாறு செய்ய முடியாது.
வெள்ளையர்கள் ஆட்சிக் காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும் சட்டம் தற்போது மீறப்பட்டுள்ளது.சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் பற்றி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.கோடிக் கணக்கான இந்த சிலை சேதமடைந்துள்ளது.சிலைக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.இந்த சிலைக்கு ஏற்படுத்திய சேதத்தின் காரணமாக நாட்டுக்கு சாபம் ஏற்பட்டு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருங்காட்சியக புத்தர்சிலை சேதம் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு தேவை – ஆனந்த தேரர்
அருக்காட்சியக புத்தர் சிலை சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபாயராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் பௌத்த சின்னங்கள் தொடர்பிலான கண்காட்சிக்கா அருங்காட்சியகத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட அனுராதபுர யுகத்தைச் சேர்ந்த புத்தர்சிலை சேதமடைந்துள்ளது.
தற்போது அனைத்து விடயங்களுக்காகவும் ஆணைக்குழுக்கள் நிறுவப்படுகின்றன.எனவே, புத்தர்சிலை சேதமடைந்தது தொடர்பிலும் ஆணைக்குழு நிறுவி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புத்தர் சிலை அலரி மாளிகைக்கு எடுத்துச்செல்ல அனுமதியளிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அருங்காட்சியக பணிப்பாளர்நாயகத்தின் எதிர்ப்பிற்கு மத்தியில் புத்தர்சிலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதனால் அதன் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென பெவிதி ஹன்ட அமைப்பின் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment