Header Ads



பல்கலைக்கழகங்களில் முஸ்லிம்களிடையே, தொடரும் சாபக்கேடு

-MuslimWatch + Faaraa-

Muslim Watch இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனைகளை அலசும் ஒரு களமாக இருப்பது, போற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இன்று Muslim Watch ஊடாக முஸ்லிம் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்கலை கழக மாணவர்களின் கவனத்திற்காக நான் இந்த திறந்த E-mail ஐ பதிவு செய்கின்றேன்.

பல் கலை கழகங்களில் பகடி வதை, புதிதல்ல. அதே போல இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்த அளவில், ஒரு குறைந்த சனத்தொகை முஸ்லிம்கள் தான் பல்கலைக் கழக அனுமதி பெறுகின்றனர் என்ற தெளிவும் எங்களுக்கு புதிதல்ல.

எது எவ்வாறாயினும் பகடி வதைகளின் போது முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எவ்வாறான கட்டுக் கோப்புகளுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்குவதில் பெற்றோர்களும் ; இவர்கள் எப்படிப் பட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தேடலில் உலமாக்களும் பங்களிப்பு வழங்கியிருந்தாலும் அவை யாவும் பலன் தரவில்லை என்பது கவலைக்குரிய கசப்பான உண்மையாக இருந்து கொண்டு இருக்கின்றது.

நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் South Easters University இல் ஒரு குறித்த பீடத்திற்கு புதிய மாணவ மாணவிகள் உள் வாங்கப் பட்டுள்ளனர்.

முஸ்லிம் சனத்தொகை கூடவாக உள்ள இந்த பல்கலைகழகத்தில், வழங்கப் பட்டுக்கொண்டிருக்கும் பகடி வதைகளில் ஒன்று, குடை இன்றி பல்கலை கழகத்திற்குள் சமுகம் தருவது !

இந்த நாட்களின் காலநிலையை கருத்திற் கொண்டு, அரசாங்கமே மாணவ மாணவிகளின் நன்மை கருதி, இடை வேளையை கூட்டுவதிலும், பாட நேரங்களை குறைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது, மனிதாபிமானம் இன்றி இளம் யுவதிகளையும், இளைஞர்களையும் இவ்வாறு குடைகள் இன்றி , கிழக்கு மாகாண வெப்பத்தில் அலைய விடுவது, படித்த முட்டாள்களின் அறிவீனச் செயலோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

தயவு செய்து இந்த விடயத்தை உரிய அதிகாரிகள் மூலம் கட்டுப்படுத்த முன் வருமாறும், உங்கள் பங்களிப்பை உங்களுக்கு இயன்ற அளவில் வழங்குமாறும் , இதை வாசிக்கும் ஒவ்வொரு முஸ்லிம் ஐயும் நான் கேட்டுக் கொள்கின்றேன்

பகடி வதை செய்வது பல்கலைக் கழக கலாச்சாரமாக இருந்தாலும், முஸ்லிம்கள் என்ற ரீதியில் எங்களுக்குள்ள தனித்துவத்தை பேணி , ஷரீஆவில் ஹராமாக்கப் பட்ட விடயங்களில் இருந்து விலகி நடக்கும் அறிவு இந்த மாணவ சமுதாயத்திற்கு ஏன் இன்னும் எட்டவில்லை ??

பல பல்கலைக் கழகங்கலில் முஸ்லிம் மாணவர்களுக்கு மத்தியில் நடை பெரும் சைத்தானிய பகடி வதைகள் சிலவற்றை பட்டியல் படுத்துகின்றேன் ...
"அவர்கள் பல்லிப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய எதிர்மறையான எதிர்வுகூறலை, மெய்ப்பிக்கும் கூட்டத்தில் இவர்களும் அடங்குகின்றனரோ என்று கூட கேள்விகள் எழுகின்றன !

Super Seniors மற்றும் Seniors புதிய மாணவர்களின் கைத் தொலைபேசிகளில் கண்ட நேரம் தொடர்பு கொண்டு பேசுவார்களாம். ஆண் பெண் வித்தியாசம் மீறி, முஸ்லிம்களில் மஹ்ரம் பற்றிய வரையரை மீறி , ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் தொலை பேசியில் பகடிவதை பண்ணுவது எத்தனை சமூகத் தலைமைகளுக்கு தெரியும் ?? எத்தனை பெற்றோருக்கு தெரியும் ?

"அஸ்ஸலாமு அழைக்கும் நானா"
"அஸ்ஸலாமு அழைக்கும்" தாத்தா என்று Junior சொல்ல வேண்டுமாம்
அவ்வாறு சொல்லாவிட்டால் SENIOR கு கோபம் வருமாம்
ஸலாத்திற்கு senior சொல்லும் பதில் என்ன தேயுமா?
"போடா" அல்லது "போடி "

சலாம் என்பது இஸ்லாத்தின் சொத்து. இதை எதிர்கால முஸ்லிம் தலைவர்கள், இன்று இவ்வாறு கொச்சைப் படுத்திக்கொண்டு அலைவது எத்தனை உலமாக்களுக்கு தெரியும் ?

Seniors, juniors ஐ மதினி என்று கூப்பிடுவாராம் அதற்கு "என்ன மச்சான்?" என்று Juniors கேட்க வேண்டுமாம், அப்படிக் கேட்கவில்லை என்றால் , இங்கே எழுத இயலாத துர் வார்த்தைகளால் Seniors , juniors இற்கு பதில் தருவார்களாம்.

சினிமா பாடல் கைத்தொலை பேசியில் போடப்பட்டு, அதற்கு முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் ஆண்களுக்கு மத்தியில் Lip sync பண்ணி பாட வேண்டுமாம்.

பெண்களை ஜமாத்தாக தொழ வைத்து கண்காணிப்பார்களாம் Seniors. தொழ முடியாத யுவதிகள் இருந்தால், அவர்கள் ஏன் தொழவில்லை என்ற காரணத்தை வெளிப்படையாக எல்லோர் முன்னாலும் சொல்ல வேண்டுமாம். இப்படி சொல்லா விட்டால், "இதை சொல்ல முடியாவிட்டால் எதற்க்காக Medicine படிக்க வருகிறாய்?" என்று முஸ்லிம் இளைஞர்களே எம் யுவதிகளிடம் வினாத் தொடுப்பார்களாம்.

இது பிறிதொரு பல்கலைக் கழகத்தின் மருத்துவபீட பகடி வதை. இது எத்தனை பேருக்கு தெரியும் ?

இவ்வாறு இவர்களின் சைத்தானிய கூத்துக்களை பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். ஆனால் அதுவல்ல நான் எழுதும் இந்த Email இன் நோக்கம்,

தயவு செய்து இலங்கைவாழ் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் வரையறை பற்றிய இஸ்லாமிய விளக்கத்தை கொடுக்க பள்ளிவாசல்கள் தொடங்கி , ஜமிய்யதுல் உலமா வரை உள்ள அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும் என நான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இது உரிய நேரத்தில் கவனிக்கப்படத் தவறினால், ஹயாவை (வெட்க உணர்வு) இழந்த ஒரு படித்த (?) சமுதாயத்தை நாங்கள் எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் நான் எனது கடமையை செய்து விட்டேன். தயவு செய்து பேச்சாளர்களும், மிம்பர் மேடைகளும், உலமாக்களும், இளைஞர் சங்கங்களும் இந்த விடயத்திற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், 

உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என்றென்றும் துஆக்களுடன் இந்த திறந்த மடலை முடிக்கின்றேன்.

16 comments:

  1. மாணவர்கள் பல்கலை கழகம் சென்ற பின்னர் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மிகவும் சிரமமான காரியமாகும்.ஆனால் அவர்கள் உயர்தரம் கற்றுக்கொண்டு இருக்கும்போது அவர்களுக்கு பல்கலை கழகம் சம்பந்தமான முழு விபரங்களையும் முழு நாள் கருத்தரங்காக செய்து அவர்களை தொடராக பயிற்ச்சி அளித்து வந்தால் இதற்கான ஒருமாற்றத்தை காண முடியும் .மேலும் சாரணர் அமைப்பு சிறந்த ஒழுக்க சீலர்களை உருவாக்கும் அமைப்பாக காணப்படுகின்றது .இதனை முஸ்லிம் மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால் அதன் மூலமும் எமது பல்கலை கழக மாணவர்களை ஒழுக்கமும் ,கட்டுப்பாடும் உள்ள மாணவர்களாக உருவாக்க முடியும் .

    ReplyDelete
  2. Faara.. did you go any university in Sri Lanka or studied foriegn university in Sri Lanka..

    ReplyDelete
  3. இலங்கையில் பல பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் விஷேசமாக தென்கிழக்கு பல்கலை..ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு பெறுமதிவாய்ந்த இடம் காரணம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு காரணம் மற்றயது அதிகமான மாணவர்கள் இங்கு முஸ்லிம்கள் அதனால் மற்றைய சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக அமைய வேண்டிய இப்பல்கலைக்கழகம் இவ்வாறான மோசமாக நடந்து கொள்வது இஸ்லாமிய வளர்ச்சிக்கும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை .இன்றைய இலங்கையில் முஸ்லிம்கள் கல்வியின் மூலம் தான் தலை நிமிர்ந்து நிற்ற முடியும் என்று ஒவ்வொரு முஸ்லிம்களின் கூட்டங்களிலும் பீரங்கி பெச்சுப்பெசும் நாம் இன்னும் முஸ்லிம்களின் கல்விக்கு சாவு மணியடிக்கும் இவ்வாறான விடயங்களை இனம் காணவில்லை.கடந்த காலங்களில் பல்கலைக்கழக நுழைவு கிடைத்தும் குறிப்பிட்ட மாணவிகள் ஆசையுடன் இருந்தும் பெற்றோர்கள் குடுப்பத்தார்கள் வேண்டாம் அது ஒரு கேவலமான நியையை ஏற்ப்படுத்தும் அப்பென்பில்லைக்கு எதிர்காலத்தில் மானத்தை காக்கும் பக்குவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக தடுக்கப்பட்ட நிகழ்வுகளை பார்க்கக்கூடியதாக இருந்தது.இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் விடயம் ஹஜ்ஜத்துல் விதாவில் ரசூலுல்லாஹ் வாளுயுருத்தி தடை செய்த விடயத்தை படித்தவர்கள் என்று மார்தட்டும் நம் பல்கலை.. மாணவர்கள் சாதாரணமாக செய்கிறார்கள்.1 இந்த நாள் எவ்வாறு புனிதமானதோ,இந்த பூமி எவ்வாறு புனிதமானதோ (மக்கா)அவ்வாறே ஒரு மனிதனின் மானம் ஒரு மனிதனின் இரத்தம்,புனிதமானது என்றார்கள்.இது இரண்டையும் இவர்கள் ஓட்டுகிறார்கள் ஏன் சிலவேளை கொலை மரணம் ஏற்ப்படுகிறது தற்கொலை ஏற்ப்படுகிறது.இதுதானா இஸ்லாம் நமக்கு கற்றுத்தந்த பாடம்.அன்புன்ள்ள அறிஞர்களே:நம் நாட்டில் உள்ள சகல் பல்கலை..களிலும் முஸ்லிம் மஜ்லிஸ் என்ற ஒன்று இருக்கிறது அதனை அணுகி உலமா சபை மற்றுமுண்டான இஸ்லாமிய வழிகாட்டிகள் இவர்களுக்கு மாதாமாதம் இவ்வாறான விடயங்களால் ஏற்ப்படும் தீமைகள் சமுதாய பாதிப்பு போன்ற வற்றை விளக்கப்படுத்தி தக்வாவின் அடிப்படையில் பழைய மாணவர்கள் மத்தியில் ஊக்கமளிக்க வேண்டும்.இம்முயற்சி ஒரே ஒரு வருடம் மேட்கொள்ளப்பட்டு நிறுத்தப்படுமானால் அத்தோடு இந்த சீர்கெட்ட பகிடிவதை என்னும் கொடிய பாவம் நின்று விடும்.வருடாவருடம் வாரக்கூடிய புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் தாங்கள் அனுபவித்ததை மற்றவர்களுக்கு செய்யும் கொடுமை தொடர்ந்துகொண்டு இருக்கிறது.முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் இந்த விடயம் நிறுத்தப்படுமானால் இன்ஷா அல்லாஹ் நாடளாவிய ரீதியில் இவ்வேளை இருத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  4. Where is my comment.. Plz ask to essay author.. did he go university or not?

    ReplyDelete
    Replies
    1. I've also same question i must want to knw d answr from author for ur question

      Delete
    2. I've also same question. I must want to knw d rpl from author.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Yes you are correct.. we should work with this to avoid.. same question I have to ask you also did you go any university?.. because according to this essay he denote very less..

      Delete
  6. Sifri Faheem, your question doesn't make any sense here. Are you going to justify all these nonsense activities in a so called Muslim dominant university?

    ReplyDelete
  7. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வாடையே நுகராதவர்கள் இங்கு பகிடிவதை பற்றி கதைக்க தகுதியற்றவர்கள்.
    இங்கு இருக்கும் நமக்கு தான் அது தெரியும் Raging. என்றால் என்ன என்பதை அறியாத பிஞ்சுகள் நீங்கள். அக்கினிப் பல்கலைக்கழயில் ஸலாம் பகிடிவதைக்கா அல்ல புதியவர் தம்மோடும் மற்றையோரோடும் நட்புணர்வு செயற்பட. ஸலாத்திற்கு பதில் இங்கு உண்டு நபிவழியில்.
    புதிதாக வந்த மாணவர்கள் குடைபிடித்து செல்வதை உங்களால் பார்க்க முடியாது காரணம் நீங்கள் வளாகத்திற்குள் இல்லை.அவர்கள் வந்த நாள் முதல் குடையுடனே செல்கிறார்கள் இதுவே உண்மை.
    நீங்கள் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக வேண்டும் என்பதற்காக இவ்வாறான விமர்சனங்களை விடுத்து சிறந்ததை எழுதுங்கள்.
    பல்கலைக்கழக சமூகத்திற்குள் சிறந்த சமூகத்தை உருவாக்குவது தான் எமது நோக்கமும் செயற்பாடும்.
    பல்கலைக்கழக மாணவ சமூகம் என்பதால் நாம் ஒன்றும் மார்க்கத்தை துறந்து வாழ்பவர்கள் அல்ல.
    எமது கலாச்சாரம் சமயம் ஒழுக்கம் அனைத்தையும் பேனியவர்களாக தான் வாழ்ந்து வருகிறோம்.முஸ்லீம் மஜ்லீஸ் அவ்வாறு தான் வழி காட்டுகிறது.

    ReplyDelete
  8. அருமையான பதிவு. இது கட்டாயமாக கவனிக்கப் பட வேண்டிய ஒரு விடயமாகும். இன்ஷா அல்லாஹ்.
    நான் கருத்துரைகள் பற்றி சில விடயங்களை கூறிக் கொள்ள வேண்டும்.
    எங்கள் சமுதாய முஸ்லிம்களின் பிரச்சினை இதுதான். ஒரு விடயம் பதியப்பட்டால், அதனை தீர வாசித்து கருத்தை விளங்குவதை விட்டு விட்டு , ஒரே வாசிப்பில் தாம் அறிந்ததே உண்மை என்று கருத்துரை பதியும் மக்களே எம்மில் அதிகம். மேலே உள்ள ஒரு சில கருத்துரைகள் இதற்கு உதாரணம்.

    Sifri Faheem : உங்கள் ஆங்கிலம் பிழையானது. இந்த செய்தியை நீங்கள் தமிழில் வாசித்து விளங்கியுள்ளீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் கருத்துரை பதிவு செய்கின்றீர்கள். ஆங்கிலத்தில் பதிவு செய்வது பிழைய்யல்ல , ஆனால் பிழையான ஆங்கிலத்தில் இவ்வாறு குழப்பம் விளைவிப்பது சகிக்க முடியாமல் உள்ளது.


    சகோதரி fathima rizla : நீங்கள் ஆவேசமாக இருக்கின்றீர்கள். இந்த கட்டுரையை எழுதிய சகோதரர் Fara வை எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த விதத்திலும் தெரியாது. அனால் அவரின் இந்த கருத்து செறிவுள்ள ஆக்கம் செவ்வையாக, பொருள் மிக்க இருப்பதால் அதில் நான் எந்த குறையும் காணவில்லை.
    எனது உடன் பிறந்த தங்கை கூட கடந்த வாரம் தென் கிழக்கு பல்கலை கழகத்திற்கு கலை பீடத்தில் உள் வாங்கப் பட்டார். குடை இன்றி உள்ளே வருமாறு அவரும் இன்று வரைக்கும் வதை செய்யப் படுகின்றார். இதற்கு நான் சாட்சி.
    என்னைப் போன்ற அண்ணன் மார்கள் உங்கள் கருத்துப் படி கேம்பஸ் வாடை நுகராத கிணற்றுத் தவளைகளாகவும், பகடி வதை அறியாத பிஞ்சுகலாகவும் இருக்கலாம், ஆனால் உங்களின் கருத்துரையை பார்த்தல் நீங்கள் கேம்பஸ் வாடை அறிந்தவரா என்று சந்தேகம் வருகின்றது எனக்கு.

    சகோதரர் Fara குடை பற்றிய பகடி வதை எந்த பீடத்தில் நடைபெறுகின்றது என்று குறித்து சொல்லவில்லை, ஆனால் அவர் பேனா மை பொய் சொல்லவில்லை !! விசாரித்துப் பாருங்கள், கலா பீடத்தில் இந்த குடை வதை நடக்கின்றதா இல்லையா என்று.
    எதோ நாம் கேம்பஸ் போகின்றோம் என்று கூறி இவ்வாறு அறிவாளிகள் போல் கருத்துரை பதியும் நேரத்தில், உண்மையாக என்ன நடக்கின்றது என்று தேடிப்பாருங்கள். இதே Jaffna Muslim தளத்தில் இன்று பதியப் பட்டுள்ள பகடி வதை பற்றிய செய்தியை வாசித்து பாருங்கள். ஒரு காபிரான விரிவுரையாளர் பகடி வதைக்கு எதிராக என்னவெல்லாம் எழுதியிருக்கின்றான் என்று பாருங்கள் .
    சலாம் சொல்வது பிழை இல்லை , மக்ரம் அல்லாத ஆண்களும் பெண்களும் சலாம் சொல்வது தான் பிரச்சினை. படித்தவர்களாக இருந்துகொண்டு இவ்வாறு அறியாமையை வெளிப்படுத்தும் கருத்துரைகள் பதிவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

    சகோதரர் Fara : உங்களின் இந்தப் பதிவை நான் இன்று எனது கிராம ஜும்மா பள்ளி நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தேன். எங்கள் கிராமிய மட்டத்தில் இருந்து இதற்க்கான விளிப்ப்பு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு நடாத்தப் படும் இன்ஷா அல்லாஹ். நீங்கள் இங்குள்ள கருத்துரைகளை வாசிப்பீர்கள் என்று நம்புகின்றேன். இப்படியான பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறைகளை நீங்கள் மென் மேலும் எங்களுடன் பகிர்ந்துகொண்டால் அது எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டியாக அமையும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே உங்கள் சகோதரியிடம் கூறுங்கள் குடைபிடித்து செல்வதற்கு முடியும் என்று ஏனையவர்கள் பிடித்து செல்வதை அவர் காணவில்லை போலும்.
      ஆம் ஆவேசத்துடன் தான் கூறுகின் றேன் இவர் தனது தனிப்பட்ட சுயநலம் கருதியே எனது பல்கலைக்கழகத்தின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார் என்பதே உண்மை.எனவே இவரது கருத்துக்கள் சமூகநலனை நோக்கியது என்பதை ஏற்க முடியாது.

      Delete
    2. சகோதரி Rizla! அவர கூறியவை உண்மையா பொய்யா என்பதை அங்கு இருக்கும் உங்களின் இந்த ஆவேசமான பின்னூட்டத்தை வைத்தே எங்களுக்கு அறியப்படுத்தியமைக்கு நன்றி...

      Delete
  9. Bit unislamic. Students are learners, you shouldn't ask Allah to punish them . You should ask Allah to guide them in the right path.

    ReplyDelete
  10. சகோதரே உங்கள் உடன் பிறந்த சகோதரி இன்று வரை வதை செய்யப்படுவதற்கான நியாயமான ஆதாரம் எதுவுமில்லை.ஏனெனில் இரண்டாம் வருட மாணவிகள் 1 லாம் வருட மாணவர்கள் உள்வாங்கப்பட முன்னரே விடுமுறையில் இருக்கிறார்கள்.இன்றுவரை அவர்கள் விடுமுறையில் இருக்க எப்படி பகிடிவதைக்ஙகு உள்வாங்கப்பட முடியும்.வதை என்று கூறும் அளவுக்கு அத்து மீறல் அங்கு நடை பெறுவதில்லை.பொய்யான ஆதாரங்களை காட்டி சுட்டிக்காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இக்கட்டுரையில் juniors ஸலாம் சொன்னால் seniors கூறும் பதில் போடா போடியாம் என்று கூறிப்பிடப்பட்டிருந்து.இது முற்றிலும் உண்மைக்கு புறம் பானது.அதற்கு நான் சாட்சி.இது வரையில் அவ்வாறு நடைபெற்றதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
    மேலும் சகோதரே குறிப்பிட்டு இப் பல்கலைக்கழகம் தொடர்பில் முறையிடும் ஆதாரமற்ற செய்திகள் தனிப்பட்ட நோக்களுக்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ என்று புரியாத கேள்வியாக காணப்படுகின்றது. எமது சமூகத்தினை தாழ்வுபடுத்தும் செயலாக காணப்படுகின்றது.இவ்வாறான விடயங்களை இயன்றளவு தவிர்த்துக் கொண்டால் மிகவும் சுமூகமாக இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.