Header Ads



நசீர் அஹ்மட் விவகாரம், ஹக்கீம் தெரிவித்த பகிரங்க கருத்துக்கள் இவைதான் (முழு உரை)

சம்பூர் விவகாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை கடிந்து கொண்டதன் பின்னணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரளியின் நோக்கமே அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவது தான் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஷமிகள் சிலர் நாட்டையே குழப்புவதற்கு எங்களுடைய முதலமைச்சருடைய அந்தக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாகி இருக்கின்றன. ஆகவே அவர் மன்னிப்புக் கோரவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜோர்தான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம்.லாபிரை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை இரவு கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றபோது அதில்பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு அவர் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது,

முன்னைய அரசாங்கத்தில் முஸ்லிம்களை வன்முறையினால் வம்புக்கு இழுத்தார்கள். இப்பொழுது முஸ்லிம்களை வலிய வம்புக்கு இழுப்பதற்குத் தயாராகி வருகின்றார்கள். எனவே, இதில் முக்கியமாக நாங்கள் பொறுப்புணர்ச்சியோடும், மிகுந்த சாணக்கியத்தோடும் இந்த விடயத்தை கையாள வேண்டும். 

ஜப்பானிலிருந்து ஜனாதிபதி வரும் வரைக்கும் நான் பொறுமையாக இருக்கின்றேன். நான் பிரதமரோடு இரண்டு நாளாகப் பேசி மூன்றாவது நாளாக இன்றும் பேசினேன். நாங்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருப்பது நல்லது என்பது தான் அவருடைய விருப்பமும் கூட. ஏனென்றால் அரசாங்கத்தையே நெருக்கடிக்குள் தள்ளுவது என்பது தான் இந்தப் புரளியின் பின்னால் இருக்கிற முக்கியமான விடயம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டையே குழப்புவது அதற்கு எங்களுடைய முதலமைச்சருடைய அந்தக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாகி இருக்கின்றன. 

முஸ்லிம் சமூகம் வளர்ந்ததே சகிப்புத் தன்மையால் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆரம்பகாலத்தின் இஸ்லாமிய வளர்ச்சியின் அடிப்படையே சகிப்புத் தன்மை தான். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கத்து மண்ணிலே அனுபவித்த அட்டூழியங்களை எதிர்கொண்டது எதனால் என்று பார்த்தால், முதலாவது இறை நம்பிக்கையில் அசைக்க முடியாத திடமான அந்த நம்பிக்கை. அடுத்தது சகிப்புத் தன்மை என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த சகிப்புத் தன்மை தான் உலகில் ஐந்திலொரு பங்கினராக இந்த சமயத்தினரை ஆக்கியிருக்கிறது. எனவே அவசரப்பட்டு ஆத்திரப்படக் கூடாது என்பதும் தாராளத் தன்மையோடு மன்னிப்புக் கோருவது என்பதும் இந்த சமூகத்தின் மிக முக்கியமான பண்புகளாக மாறவேண்டும். 

எனவே ஒழிவு மறைவில்லாமல் முதலமைச்சருடைய கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் என்பது அதற்கான காரணம், பின்னணி, இவற்றையெல்லாம் ஒரு விசாரணைக்குப் பிறகு அதிதிகளுக்கான உபசரிப்பு வரிசையில் முதலமைச்சருக்கான ஸ்தானம் என்பன குறித்த விடயமெல்லாம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரலின் பின்னால் நடைபெற வேண்டிய விடயங்களாகும். ஏனென்றால், வம்புக்கிழுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்ற கூட்டத்திற்குள் நாங்கள் போய் வலிய மாட்டிக் கொள்வது என்பது இந்தக் கட்டத்திலோ, எந்தக் கட்டிடத்திலோ ஆகுமான விடயமல்ல. இதைப் பல தடவைகள் நான் அனுபவரீதியாக அறிந்திருக்கின்றேன். 

ஒரு தேர்தல் கூட்டத்தில் நான் காவி உடைப் பயங்கரவாதத்தைப் பற்றி கதைக்கப் போய் அடுத்த நாளே உடனே எந்த மாற்றுக் கருத்துமில்லாமல் எந்த நிபந்தனையுமில்லாமல் அது இந்த நாட்டின் பேரினமக்களைப் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்ற வார்த்தையைச் சொல்லி புரளிகிளப்பத் தயாராகிக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் முற்றுப் புள்ளிவைத்தேன்;. 

ஆனால் இப்போது மன்னிப்புக் கோரினாலும் புரளியை விடுவதாக இல்லை என்ற ஒரு வேகம் இருக்கின்றது. ஏனென்றால் இதற்குப் பின்னால் வேறு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து, லாபகரமாக விடுபடுவது, என்பதும் சாணக்கியமாக இந்த விடயத்தை கையாள்வது என்பதும் ஒரு புறமிருக்க இதன் பின்னால் இருக்கின்ற மேலாதிக்க வாதிகளின் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்டு இன்று கிழக்கு மண்ணிலே பலவந்தமாக மீண்டும் புகுத்த நினைக்கின்ற மேலாதிக்க உணர்வுகளை மிக சாணக்கியமாக முறியடிக்க ஒரு முயற்சியை நாம் கையாள வேண்டும். 

அதை எவ்வாறு செய்வது, எப்படிச் செய்வது? அதேவேளை இந்தநாட்டின் அரசியற் தலைமைகள் இந்த விடயங்களைக் கையாளுவதற்கு நாங்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அதேநேரம் எங்களுடைய சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் பாதுகாத்துக் கொண்டு அதனைச் செய்வது. இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது, எவ்வாறு செய்வது, எங்கு செய்வது என்ற விடயங்களை நாங்கள் மிக நிதானமாக செயல்பட வேண்டும். ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டியது வீராப்புப் பேசுவது அல்ல. 

முக்கியமாக எமது இளம் அரசியல்வாதிகள் இதனை தயவு கூர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஒரு சில பிசாசுகளை சென்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரட்டி இருக்கின்றோம். அந்தப் பிசாசுகள் இந்த ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு மீண்டும் தங்களுடைய மறு பிறவி எடுக்கின்ற அந்த முயற்சிக்கு வழிகோலாமல் தப்பிக்கின்ற உபாயங்களைத் தான் நாங்கள் தேட வேண்டுமே ஒழிய, இந்தக் கட்டத்திலே கௌரவம் குறித்த விடயங்களைப் பேசுவதை ஒருபுறம் வையுங்கள். 

ஆனால் இந்த மண்ணிலே கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அரசியல் என்கின்ற விடயம் இன்று முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய சக்திகள் எங்களிடம் இருக்கின்றது என்ற உணர்வோடு அதை மிக சாணக்கியமாக மிகப் பக்குவமாக பாவிப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டுமேயொழிய, எடுத்த எடுப்பிலேயே இந்தப் பூமிக்கடியிலே புதைத்த பூதங்கள் மீண்டும் தலைதூக்குவதற்கு நாங்கள் வழி சமைக்காமல் மிக லாவகமாக இந்த விடயம் கையாளப்படல் வேண்டும். 

எனவே அந்த விடயங்களை ஜனாதிபதியும் பிரதமரும் கையாளுவார்கள். அவர்களோடு கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலே நான் முதலமைச்சரை ஒருபுறம் தள்ளிவிட்டு என்னால் அதனை கையாள முடியும். அதிலே இந்தக் கட்சியின், சமூகத்தின், இந்த நாட்டின் எல்லா சிறுபான்மை சமூகங்களும் கௌரவம் மாத்திரமல்ல, எங்களுடைய இருப்பும் எங்களுடைய இருப்புக்கான நியாயங்களும் மிக அழுத்தம் திருத்தமாக இந்த நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்துக்கு முன்னாலும் கையாளப்படுவதை உறுதி செய்ததாக அந்த நடைமுறை அமையும் என்றார். 

7 comments:

  1. Whoever bit their tongue over Naseer Ahamed controversy, Muslims- the politicians in particular, have very well repesented the reputation of the community they belong to neverthless the true intention of them keeping their mouth shut which is a matter between their heart and Allah. The values Muslims hold onto need to be demonstrated in how they react to situations.

    ReplyDelete
  2. All that said is well and nice and sophisticated but you are still a big time failure with "National Seats", Mr Rauff Hakeem. Politics is a service to the community and not a way to make a living. One term- good, Two terms- okay- if all your intentions are nothing but serving the community for the sake of Allah. More than Two terms- that's pure greed and look yourself in the mirror and ask yourself 'For what good reason I desire to die in the parliament and that my janaza needs go only from there?'

    Time for you(and people like you that desire their Janaza to leave from the parliament) to retire, make way for the younger generation and back them up with your expertise.

    ReplyDelete
  3. சாதாரன அரசியல் அதிகாரம் பெற்ற சிங்கள அரசியல் வாதிகளும் அரசியல் அதிகாரம் இல்லாத சிங்கள மத குருமார்களும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பொலிசாரயும் இராணுவத்தினரயும் மிகக் கடுமையாக கேவலமாக திட்டித்தீர்த்த பல சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கிழக்குமாகான முதல்வர் அந்த மாகானத்தில் சகல அதிகாரமும் கொண்ட ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவர்.அவருடைய பிரதேசத்தில் அவரை அவமதிக்கன்ற அதிகாரிகளை அவர் எச்சரிக்கை செய்து அறிவுறுத்திய இந்த விடயத்தை அன்நியவர்களைவிட நம்மவர்களும் முதல்வரின் கட்சித் தலைவரும் பூதாகரப்படுத்திப் பேசிப் பேசி முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் அறிக்கைவிடுவதும் மேடைபோட்டுபேசுவதும் வேடிக்கையாக இருக்கின்றது. முஸ்லிம்களின் வடுதலைக்கான பேரம் பேசும் ஒரு சக்தியாக உருவாக்கப் பட்ட கட்சியின் தலைவரின் பேச்சு ஒரேகட்சிக்குள் மாற்றான் தாய் மனப்பான்மையில் பேசுவதாகவே தெரிகிறது.

    ReplyDelete
  4. ஹகீம் அவர்களே, அப்பாவி முஸ்லிம்களை கதைத்து சமாளிப்பதில் நீங்கள் படுகில்லாடி, ஆனால் நடைமுறையில் செய்து காட்டுவதில் தான் உங்களது இயலாமை இருக்கிறது. மன்னிப்பு கேட்க வைத்து உங்களுக்கு உள்ள பேரினவாதிகளின் அழுத்தத்தையும் பயத்தையும் குறைத்து கொண்டு அவர்களின் கால்களில் கொஞ்சம் கெளரவமான முறையில் சரணாகதி அடைந்து கொண்டு உங்கள் செளகரியமான அரசியலை முன்னெடுப்பது தான் உங்களது கடந்த கால வரலாறு. இத்த வரைக்கும் முதலமைச்சர் ( மாகாணத்தின் அரசியல் அதிகாரம் படைத்த முதல் மனிதர்) அவமானபடுதப்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்ட தவறியுள்ளீர்கள். ஹபீஸ் நசீருக்கு எதிராக முப்படைகளின் தடைக்கு எந்த வித கண்டனத்தையும் தெரிவிக்க தவரியுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவத்தில் நீங்களே பெருமைப்படும் படி ஏதாவது இந்த சமூகத்துக்கு பெற்றுக் கொடுத்ததை உங்களால் கூற முடியுமா? ( கட்சியை காப்பாற்றியது போன்ற உள்டாவெல்லாம் வேண்டாம்). ஒட்டுமொத்தமாக கூருவதானால் கிரிக்கட்டில் அடிப்பதற்கான பந்து கிடைக்கு மட்டும் காத்திருந்து தனது இலக்கை அடையமுடியாமல் தோல்வியை தழுவிக் கொள்ளும் அணியாகவே உங்களை பார்க்கிறோம். இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் மாற்றம் தேவை என்பதுதான் எங்கள் கருத்து.

    ReplyDelete
  5. ஹகீம் அவர்களே, அப்பாவி முஸ்லிம்களை கதைத்து சமாளிப்பதில் நீங்கள் படுகில்லாடி, ஆனால் நடைமுறையில் செய்து காட்டுவதில் தான் உங்களது இயலாமை இருக்கிறது. மன்னிப்பு கேட்க வைத்து உங்களுக்கு உள்ள பேரினவாதிகளின் அழுத்தத்தையும் பயத்தையும் குறைத்து கொண்டு அவர்களின் கால்களில் கொஞ்சம் கெளரவமான முறையில் சரணாகதி அடைந்து கொண்டு உங்கள் செளகரியமான அரசியலை முன்னெடுப்பது தான் உங்களது கடந்த கால வரலாறு. இத்த வரைக்கும் முதலமைச்சர் ( மாகாணத்தின் அரசியல் அதிகாரம் படைத்த முதல் மனிதர்) அவமானபடுதப்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்ட தவறியுள்ளீர்கள். ஹபீஸ் நசீருக்கு எதிராக முப்படைகளின் தடைக்கு எந்த வித கண்டனத்தையும் தெரிவிக்க தவரியுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவத்தில் நீங்களே பெருமைப்படும் படி ஏதாவது இந்த சமூகத்துக்கு பெற்றுக் கொடுத்ததை உங்களால் கூற முடியுமா? ( கட்சியை காப்பாற்றியது போன்ற உள்டாவெல்லாம் வேண்டாம்). ஒட்டுமொத்தமாக கூருவதானால் கிரிக்கட்டில் அடிப்பதற்கான பந்து கிடைக்கு மட்டும் காத்திருந்து தனது இலக்கை அடையமுடியாமல் தோல்வியை தழுவிக் கொள்ளும் அணியாகவே உங்களை பார்க்கிறோம். இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் மாற்றம் தேவை என்பதுதான் எங்கள் கருத்து.

    ReplyDelete
  6. Let's watch how this issue will be addressed in the parliament now.

    ReplyDelete
  7. சில விடையங்களில் நாம் விட்டுக்கொடுப்பதால் நாம் ஒன்றும் பயந்து விடவில்லை என்பதை சற்று புரிந்துக்கொள்ளவேண்டும் kuruvi அவர்களே நபியவர்கள் ஏற்றுக்கொண்ட ஹுதைபியா உடன்படிக்கையை சற்று புரட்டிப்பாருங்கள் அதில் முஸ்லிம்களுக்கு எவ்வாறான சாதகமானவைகள் இருந்தது என்று. முக்கியமாக தலைமத்துவம் ஒன்றும் வெறும் பதவி மட்டுமில்லை அது ஒரு நெருப்பு நாற்காளியில் உக்காறுவதுபோன்று என்பதனையும் சற்று யோசிக்கவும்

    ReplyDelete

Powered by Blogger.