வெல்லம்பிட்டியின் தற்போதைய, நிலவரம் இதுதான் (நேரடி ரிப்போர்ட்)
-Mohamed Naushad-
வெல்லம்பிட்டி சந்தியின் தற்போதைய நிலவரம் காட்சிகள். வெல்லம்பிட்டி தபால் நிலைய நடைபாதையில் இருந்தவாறு இந்தப் பதிவை இடுகிறேன்.
நான் உட்பட மக்கள் இன்னமும் தங்களது வீடுகளை காணக்கிடைக்குமா என்ற ஆர்வத்தில் அலைமோதிய வண்ணம் உள்ளனர். தண்ணீர் மட்டம் குறைந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மேலும் இங்கு காலநிலையும் சீராக இல்லை. நான் இங்கு நிற்கும் இந்த நிமிடத்தில் கூட ஒரு முஸ்லிம் குடும்பம் சிறு குழந்தைகள் சகிதம் மெகொட கொலன்னாவ பகுதியில் இருந்து காப்பாற்றப்பட்டு வெளியே வந்து நடு வீதியில் நிற்பதை காண முடிந்தது. படையினரும் தொண்டர்களும் சிறப்பாக பணியாற்றிய வண்ணம் உள்ளனர். இப்போது மழை பெய்யவும் தொடங்கி விட்டது.


Post a Comment