Header Ads



அல்லாஹ்வுக்காக முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்..!


-MBM. Fairooz-

மள்வானை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை மழுங்கடிக்கும் வகையில் முதல் இயக்க, கொள்கை முரண்பாடுகள் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுவது கவலைக்குரியதாகும்.

இது இறுதியில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாத துரதிஷ்ட நிலையையே தோற்றுவிக்கும்.

நேற்று கொழும்பில் நான் உரையாடிய பலரும் மள்வானை இயக்க மோதல்கள் பற்றி பேசினார்களே தவிர அம் மக்கள் சந்தித்துள்ள மிகப் பாரிய அழிவுகள் குறித்தோ அவர்களின் தேவைகள் குறித்தே பேசவில்லை. இந்நிலை தேசிய தலைமை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது.

கடந்த வெள்ளிக் கிழமை காலை முதல் ஞாயிறு இரவு வரை காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களோடு இணைந்து மள்வானை பிரதேச இளைஞர்கள் சிலரின் உதவியோடு ஊடக அறிக்கையிடல், நிவாரண, மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டவன் என்ற வகையில் இந்த விடயம் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.

வெளியூர் ஒன்றிலிருந்து நிவாரண பணிக்கு வந்த ஒரு தரப்பினருக்கும் மற்றுமொரு வெளியூரிலிருந்து சுத்திகரிப்பு பணிக்கு வந்த தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மல்வானை மக்களை மேலும் பாதிப்படையச் செய்யுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

வெள்ளம் புகுந்த பகுதிகளை கழுவி, சுத்தப்படுத்தி, குப்பை கூழங்களை அகற்றுவது என்பது சாதாரணமானதொரு பணியல்ல. சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் ஒரு வீட்டை சுத்தப்படுத்த ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள் கூட போதாமலிருக்கின்ற நிலையில் இப் பணியில் ஈடுபடுகின்ற நபவிய்யா இளைஞர் அணியின் அனைத்து உறுப்பினர்களையும் வன்முறையாளர்களாக கருதி வசைபாடுவது ஏற்கத்தக்கதல்ல.

நபவிய்யா இளைஞர் அணியைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோர் 15 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து பல கஷ்டமான பகுதிகளிலும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டதை அவதானித்ததன் நிமித்தமே சில புகைப்படங்களை பகிர்ந்து பதிவொன்றை இட்டிருந்தேன். ஆனால் அதே படங்களை வைத்து அவர்கள் எல்லோரையும் வன்முறை விரும்பிகளாக சித்தரிப்பது விரும்பத்தக்கதல்ல.

அதேபோன்றுதான் மள்வானையில் கடந்த சில தினங்களாக தவ்ஹீத், தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, ஸலாமா என பல்வேறு தரப்பு சகோதரர்களும் சமூக ஊடக நண்பர்களும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகிறார்கள். அனைவரது தூய பணிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

எனவேதான், அல்லாஹ்வுக்காக இந்த முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை விரைவாக சுத்தப்படுத்திக் கொடுக்கவும் அவர்கள் எதிர்வரும் ரமழானுக்கு முன்னர் வழமைக்கு திரும்பவும் உங்களால் என்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள்.

இந்த முரண்பாடுகள் மேலும் கூர்மையடையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மள்வானையிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அல்லாஹ் நமது தூய எண்ணங்களை பொருந்திக் கொள்வானாக!

5 comments:

  1. உண்மையில் அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செய்யும்போது முரண்பாடுகள் முற்றாது. தனது இயக்கத்திற்கு/அமைப்பிற்காக வேலை செய்யும்போதுதான் முரண்பாடுகள் முற்றும். எனவே எந்தஇயக்கமாக/அமைப்பாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக, இஸ்லாத்திற்காக ஈடுபடுவோம்.

    ReplyDelete
  2. நாம் முஸ்லிம்கள் கஷ்டப்படும் அடுத்தவர்களுக்கு நாம் உதவிகளை செய்வது நம்மீது கடமை என நினைத்து சேவையாற்றும் போது நமக்குள் வகுப்பு வாதம் ஏற்ப்பட வாய்ப்பில்லை இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் நம்மிடத்தில் இஹ்லாஸ்,தக்வா ,இல்லாத காரணமே அது இருந்தால் நம் பக்கத்தில் இருந்து உதவி செய்பவன் யாரு எந்த இயக்கம்,எந்த அமைப்பு என்ற சிந்தனை நம்மிடம் வந்திருக்காது.நாம் தொழுகையில் பக்கத்தி யார் இருக்கிறான் என்ற சிந்தனை யற்று எவ்வாறு தொளுகிரோமோ அதே போன்று நம் காரியங்கள் அனைத்திலும் அடைப்பிடித்தால் நமக்குள் எந்தப்பிரச்சினையும் வராது.

    ReplyDelete
  3. நாம் முஸ்லிம்கள் கஷ்டப்படும் அடுத்தவர்களுக்கு நாம் உதவிகளை செய்வது நம்மீது கடமை என நினைத்து சேவையாற்றும் போது நமக்குள் வகுப்பு வாதம் ஏற்ப்பட வாய்ப்பில்லை இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் நம்மிடத்தில் இஹ்லாஸ்,தக்வா ,இல்லாத காரணமே அது இருந்தால் நம் பக்கத்தில் இருந்து உதவி செய்பவன் யாரு எந்த இயக்கம்,எந்த அமைப்பு என்ற சிந்தனை நம்மிடம் வந்திருக்காது.நாம் தொழுகையில் பக்கத்தி யார் இருக்கிறான் என்ற சிந்தனை யற்று எவ்வாறு தொளுகிரோமோ அதே போன்று நம் காரியங்கள் அனைத்திலும் அடைப்பிடித்தால் நமக்குள் எந்தப்பிரச்சினையும் வராது.

    ReplyDelete
  4. If relief operations organized under one umbrella this would not have happened.

    so there is question arises to all parties if someone does not want to represent any group, can't he donate and participate in the releif effort?

    Why is that all the groups like SLTG, jamath islami, tabliq and thouheeth take this opportunity to promote brand image rather than working collectively under one roof so that the collection and releif efforts would have been much effective.

    At the sametime we all should pray Allah almighty to accept all the efforts done by all groups and individual to easeup the hardships of our fellow brothers.

    ReplyDelete
  5. Let them promote how they want. We must understand one thing any organisation who does aid work will have their name. We Cannot estimate their iman whether d
    They do it for allahs sake or publicity sake.
    Oxfarm , Redcross , army, navy they all have their uniform.
    Atleast those people do something there rather than sitting and criticising. Let Allah award them according to their intention and Iman.

    ReplyDelete

Powered by Blogger.