Header Ads



ஒபாமாவின் மறுபக்கம்


பிரபலங்களின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வது பலருக்கு பிடிக்கும். அதிலும் அவர்களுடைய வினோத நடவடிக்கைகள் அறிவதென்றால் ரொம்பவே ஈர்ப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலக தலைவர் மட்டுமல்ல, பல வித்தியாசமான பழக்க வழக்கங்களுக்கும் தலைவர்தான்.

அவருடைய டீன் ஏஜ் பருவத்தில் மாரிஜூனா, கோகைன் போன்ற போதை வஸ்துகளை பரிசோதனையாக அனுபவித்திருக்கிறார்.

ஒபாமா சிறுவயதில் ஸ்பைடர் மேன், கனோன் பார்பேரியன் காமிக்ஸ் கதைகளின் சேகரிப்பாளராக ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் டீன் ஏஜ் பருவத்தில் பேஸ்கின்ஸ் ராபின்ஸ் நிறுவனத்தில் வேலைசெய்தார். அந்த பருவத்தில் அதிக ஐஸ்கிரீம் சாப்பிடுவார். அதுபற்றி இப்போது அவர் சொல்லி சமாளிப்பது, நான் பாலைவனத்தின் ரசிகன் அல்ல என்பதுதான்.


அவருக்குப் பிடித்த உணவு அவருடைய மனைவி மிச்சிலி சமைக்கும் இறால் வறுவல்தான். ஆப்பிளை ஸ்நாக்ஸாகவே அதிகம் சாப்பிட விரும்புவார்.

அவர் வாரம் ஒரு முறை முடிவெட்டிக்கொள்கிறார். அதற்காக சிகாகோ சிகை அலங்கார தொழிலாளி ஸரீஃபுக்கு 21 டாலர் கொடுக்கிறார்.

அரசியலை அடுத்து அவருக்கு பிடித்தமான வேலை என்றால் சிற்பிதான்.
இந்தோனேசியன் மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி கொஞ்சமும் அவருக்கு தெரியும்.

அவருக்கு பிடித்த திறமையை வெளிப்படுத்தும் கலைஞர்கள் என்றால், Rolling Stones, JayZ, Stevie Wonder.

ஒபாமாவின் பிடித்த டி.வி. நிகழ்ச்சிகள் Homeland starring Claire danes, Damian Lawis, The Wire.

டுவிட்டரில் உறுப்பினரான முதல் அமெரிக்க ஜனாதிபதி இவரே, அவரை 10 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர். ட்விட் ஐடி @barackobama

ஒபாமா இடது கை பழக்கமுடையவர். ஆறு பேருக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதியும் இடது கை பழக்கம் கொண்டவரே.

மனைவி மிச்சிலியிடம் ஜனாதிபதியாகும் முன்பு புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதாக வாக்குறுதி அளித்தார். துரதிர்ஷ்டவசமாக விடமுடியவில்லை. ஆனால், 2010 ம் ஆண்டுக்குப் பிறகு கைவிட்டுள்ளார்.

டீ. காபி, சாப்பிடும் வழக்கம் இல்லாத ஒபாமா எப்பொழுதாவது மது அருந்துவார். அவரின் கருப்பு காடுகள் பயணத்தின் போது குளிர்ந்த பெர்ரி டீ அருந்தினார்.


ஒபாமாவுக்கு பிடித்த சிறுவர் புத்தகம், ‘ Where the wild things are' ஆகும்.

ஒபாமாவின் ரகசிய சேவை பணியாளர்கள் அவருக்கு ‘துரோகி’ என்ற பட்டப்பெயரை வைத்துள்ளனர்.

பராக் ஒபாமா குத்துச்சண்டை வீரர் முகமது அலி கொடுத்த ஒரு ஜோடி கையுறையை இன்னும் வைத்துள்ளார்.

ஒபாமா ஒரு விளையாட்டுப் பிரியர். கூடைப்பந்து விளையாட்டில் மிக தீவிரமானவர். உயர்பள்ளி காலத்திலே சிறந்த கூடைப்பந்து வீரர் என்பதால் சகமாணவர்கள் அவரை ‘O' Bomber' என்று அழைத்தனர்.

அவருடைய உயரம்(6’11/2”) சாதகமாக இருப்பதால் மைதானத்தையே தன் வசப்படுத்திக்கொள்வார். அந்த ஆர்வம் காரணமாகவே வெள்ளை மாளிகை மைதானத்தில் கூடைப்பந்து முற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். அத்திட்டம் சீக்கிரத்தில் நிறைவேற இருக்கிறது.

200 பவுண்டுகள் எடையை தூக்கி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்வார்.

இளைஞர்கள் கால்சட்டை போன்ற வெறும் உள்ளாடைகளோடு வெளியில் வருவதை வெறுக்கிறார். அதை MTV க்கான பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதற்கான தடைகளையும் ஆட்சியில் நீட்டித்துள்ளார். அதற்கு காரணமாக அவர் கூறுவது, சமயங்களில் உங்கள் அம்மா, பாட்டி போன்றவர்களோடும் நடைப்பயிற்சி செய்ய நேரும் அப்போது அவர்கள் உங்களை குறை உடுப்போடு காண சகிக்கமாட்டார்கள். அதில் நானும் ஒருவன் என்று உடை நாகரீகத்தின் உள்ளக்கிடக்கையை பகிர்ந்தார்.

மகள்கள் மீது ஆழ்ந்த அன்புடைய ஒபாமா, ஒருமுறை தெற்கு புல்வெளியில் தன் மகள்கள் பனிப்பந்து சண்டையை பார்த்து ரசித்த பிறகு, வெள்ளை மாளிகையில் 'Snowmagedden' அமைக்கப்பட்டது.

ஒரு மனிதர் பிரபலமாகிறபோது, அவருடைய திறமைகளோடு அவர்பட்ட அவமானங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் எல்லாமே பிரபலமடைகிறது.

அதனால் நல்ல செயலுக்கு உரிய பெரிய மனிதர்கள் மக்களிடம் நல்லதை கொண்டு சேர்த்த பெருமையையும் அடைகிறார்கள்.

No comments

Powered by Blogger.