Header Ads



ஊழல் அதிகரிப்பதற்கு, மேற்கு நாடுகளே காரணம் - ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி


ஆப்கானிஸ்தானில் ஊழலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மேற்கு நாடுகளில் உள்ள சட்டவிரோத போதை மருந்துக்கான தேவை தான் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகளில் உள்ள சட்டவிரோத போதை மருந்துக்கான தேவையே ஆப்கானிஸ்தானில் ஊழல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார்.

லண்டனில் சர்வதேச ஊழல் தடுப்பு மாநாட்டில் கலந்துகொள்ள்விருக்கும் ஆப்கான் அதிபர், இந்த பிரச்சனையை கையாள தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு அவர்களுக்கு உதவி தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக ஊழல் மிக்க நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் மாறியிருப்பதற்கு கூட்டான பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டை நடத்தும் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரென், உலகிலேயே ஆப்கானிஸ்தானும் நைஜீரியாவும்தான் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்று இந்த வாரத்தின் முற்பகுதியில் கூறியது கமெராவில் பதிவாகியிருந்தது.

No comments

Powered by Blogger.