Header Ads



சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், மீன்களில் ஈயம் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு

மனித உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு-சிலாபம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனரல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வகையான மீன்களில் ஈயம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகை மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு மக்கள் மீன்களை கொள்வனவு செய்யும் போது அதிக கவனத்துடன் இருக்குமாறும் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

1 comment:

  1. இலங்கையை சுற்றிக்கடல் அந்நிய நாட்டில் இருந்து மீன் இறக்குமதியா?புத்தியுள்ள நாடு. அரசியல் வாதிகளின் இலாபத்துக்காக இந்த நாட்டில் எல்லாம் நடக்கிறது பொது மக்களுக்காக இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.