Header Ads



முஸ்லிம்களே கருத்தடைகளை நிராகரித்து, நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - எர்துகான்


துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துகான் முஸ்லீம்களை கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பில் பேசிய எர்துகான்  எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது என்றும் கட்டாயமாக வாரிசுகளை பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் துருக்கி அதிபர் குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டதற்கும் ஆண் பெண் இருவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை நிராகரித்து பேசியதற்காகவும் மகளிர் அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இது துருக்கி மக்களுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய கடமை....

    துரதிர்ஸ்டவசமாக இப்போதைய முஸ்லிம் பெண்களை மேற்கத்தேய கலாச்சாரமும் உலக சுகாதார நிறுவனத்தின் காழ்ப்புணர்வும் பெரிதாக பாதிதுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றனர் போலிக் காரணங்களை முன்வைத்து.

    அதிகமான பிள்ளைகள் சுவனத்துப் பூஞ்சோலையில் பூஞ்செடிகளாக காண எம்மவர்களுக்கு ஆசையை மீண்டும் ஊட்ட வேண்டிய தேவை உள்ளது.

    ReplyDelete
  2. Yes very important step toward to world-istan :-)

    ReplyDelete

Powered by Blogger.