Header Ads



வெளிநாட்டு தவ்ஹீத், அமைப்புக்களிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தவ்ஹீத் அமைப்புக்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் கூறுகையில்,

தமிழ்நாடு, குவைத், லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்துள்ளனர். இந்த நிதியில் ஒருதொகை வந்து சேர்ந்துள்ளது. இன்னும் வரவேண்டியுள்ளது.

இந்த உதவிகள் மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தவ்ஹீத் ஜமாத்தின் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்படும்.

அத்துடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கிடைக்கப்பெற்ற உதவிகளை வெகுவிரைவில் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளிப்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. sl.histry first time some one saying to media we recieve money sltj masha allah this the thakkuwa

    ReplyDelete

Powered by Blogger.