அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, ஆள்தேடும் சுதந்திரக் கட்சி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய வேட்பாளரை தெரிவு செய்ய நேர்ந்துள்ளதாக பெருந் தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்சவுக்கோ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் தடையில்லை என்றாலும் அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளரை துரிதமாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

You are the good choice
ReplyDelete