இலங்கையில் முச்சக்கர வண்டிக்கு பதிலாக, சிறியரக கார்கள் அறிமுகமாகிறது
முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம்.
இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 70,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Good thinking but make it affordable
ReplyDeleteQuick solution is to total ban of all three wheelers entering MAIN CITIES. This move will be a remedy for many problems. Already implemented in highways.
ReplyDelete