ஒலிம்பிக் போட்டிகளுக்கான, நல்லெண்ணத் தூதராக AR ரஹ்மான்
ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக ஓஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக ஒலிம்பிக்போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, இந்தியா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் நல்லெண்ண தூதரக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.
இதன் மூலம் சச்சின் இடம்பெற்றுள்ள இந்தியாவின் நல்லெண்ண தூதர் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து செயல்படவுள்ளார்.

அண்மைக்காலமாக, லண்டன் மேயர், ஜேர்மன் சபாநாயகர், அவுஸ்திரேலிய நீதியரசர், டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு, பாப்பரசரின் நடவடிக்கைகள், இங்கு AR. Rahman என சர்வதேசம் முஸ்லிம்களை முன்னிலைப் படுத்திக் காண்பிப்பதில் ஏதோ ஆபத்தான சூட்சுமம் மறைந்திருப்பதை உணர முடிகிறது.
ReplyDelete