Header Ads



மின்னல் தாக்கி 4 காட்டு யானைகள் பலி


இலங்கையில் மின்னல் தாக்கி நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் தினைக்களம் கூறுகின்றது.

உயிரிழந்த யானைகள் மீதான பிரேத சோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள வில்பத்து சரணாலயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு தாய் யானையும் மூன்று குட்டிகளும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடந்திருக்கலாம் வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வில்பத்து வன பிரதேசத்தின் எல்லையில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் கிராமவாசி ஒருவர் இது பற்றி தகவல் கொடுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்த பகுதிக்கு சென்றிருந்த மிருக வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன ஜயசிங்க பிரேத பரிசோதனையை நடத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.